காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வோம்: தமிழகம் போராடி வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வோம்: தமிழகம் போராடி வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி
Updated on
2 min read

சென்னை: காலநிலை மாற்ற சவால்​களை​ எதிர்த்து தமிழகம் போராடி வெல்​லும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு காலநிலை மாற்​றத்​துக்​கான ஆட்​சிமன்​றக் குழு​வின் 3-வது கூட்​டம் சென்​னையில் நேற்று நடை​பெற்​றது. இதில், முதல்வர் பேசி​ய​தாவது:

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்​போது கண்​கூ​டாக பார்க்​கிறோம். பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால், டிட்வா புயலின்போது பெரிய அளவில் பாதிப்​பு​கள் ஏற்​ப​டா​மல் தமிழகத்தை காப்​பாற்​றி​யுள்​ளோம். கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்பே பேரிடர் தடுப்பு, தகவ​மைப்பு உட்​கட்​டமைப்​பு​களை தொடங்கி விட்​டோம்.

காலநிலை மாற்ற ஆட்​சிமன்​றக் குழு, பசுமைத் தமிழ்​நாடு இயக்​கம், தமிழ்​நாடு ஈரநில இயக்​கம், தமிழ்​நாடு காலநிலை மாற்ற இயக்​கம், தமிழ்​நாடு நெய்​தல் மீட்சி இயக்​கம் என்று நாம் முன்​கூட்​டியே நிறைய செய்து வரு​கிறோம். இதனால் நாட்​டுக்கே வழி​காட்​டும் நிலை​யில் தமிழகம் உள்​ளது.

கடந்த கூட்​டத்​தில் வழங்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​கள்படி, பட்​ஜெட்​டில் ரூ.24 கோடி மதிப்​பில், காலநிலைக் கல்​வியறிவு முன்னெடுப்பு குறித்த அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. மேலும், கூல் ரூஃபிங் திட்​டத்​தை, தமிழ்​நாடு காலநிலை மாற்ற இயக்​கத்தின் 2025-26-ம் ஆண்​டுக்​கான செயல்​திட்​டத்​தில் சேர்த்​துள்​ளோம். இதன்​படி இத்​திட்​டத்தை 297 பசுமைப் பள்​ளி​களின் வகுப்​பறை​களில் செயல்​படுத்த உள்​ளோம்.

மேலும் கடலோர வாழ்​விடங்​களை, இயற்கை சார்ந்த தீர்​வு​கள் மூலம் மறுசீரமைக்​கும் திட்​டத்​தின்​கீழ், தொடர்ச்​சி​யாக அலை​யாத்தி மரக்​கன்​றுகள் நடப்​பட்டு வரு​கின்றன. இதனால், தமிழகத்​தில் 4,500 ஹெக்​டேர் பரப்​பளவாக இருந்த அலை​யாத்​திக் காடு​கள், 9 ஆயிரம் ஹெக்​டே​ராக அதி​கரித்​திருக்​கிறது. இயற்​கைப் பேரிடர்​களால் அதி​கம் பாதிக்​கப்​படு​வது பெண்​களும், பெண் குழந்​தைகளும்​தான் என ஆய்​வு​களில் உறு​தி​யாகி இருக்​கிறது.

அதனால், பாலின சமத்​து​வத்தை உறுதி செய்​யும் விதத்​தில் அரசின் திட்​டங்​களும், காலநிலை தடுப்பு மற்​றும் தகவ​மைப்பு நடவடிக்​கைகளும் இருக்க வேண்​டும். தமிழகத்​தின் மொத்த கிரீன்​ஹவுஸ் காஸ் எமிஷன் போக்​கு​வரத்​துத் துறை​யின் பங்கு 12 லிருந்து 19 சதவீத​மாக அதி​கரித்​துள்​ள​தாக தெரி​கிறது.

சென்னை போன்ற மெட்ரோ நகரில் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்க பொதுப் போக்​குவரத்தை மக்​கள் அதி​கம் பயன்​படுத்​து​வதே சிறந்த வழி. அதை ஊக்​குவிக்​க​தான் எம்​டிசி மூலம் முதற்​கட்​ட​மாக 120 மின்​சா​ரப் பேருந்​துகளை பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வந்​துள்​ளோம். மேலும் 600 பேருந்​துகளை விரை​வில் கொண்​டுவர உள்​ளாம். இதனால், போக்​கு​வரத்து நெரிசல்​, சுற்​றுச்சூழல் மாசு குறை​யும். புவிவெப்​பமய​மாதல் ‘நெட் ஜீரோ’ இலக்கை அடைய பணியாற்றி இருக்​கிறோம். இதற்​காக மாநில அரசு நிதி​யில் ரூ.500 கோடி வரை ஒதுக்​கி​யுள்​ளோம்.

நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்​களுக்​கான நிவாரண நிதி​யாக அரசு கேட்​ட​தில் வெறும் 17 சதவீதத்தை தான் மத்​திய அரசு விடு​வித்​திருக்​கிறது. நாம் கேட்​டது ரூ.24,679 கோடி; வழங்கியதோ வெறும் ரூ.4,1136 கோடி மட்​டும்​தான். எத்தனையோ சவால்​களை எதிர்​கொண்டு தமிழகம் போ​ராடி, வென்​றிருக்கிறது. அது​போல், இந்த காலநிலை மாற்​றச் சவால்​களை​யும்​ எதிர்த்​து தமிழகம்​ போ​ராடும்​, வெல்​லும்​. இவ்​வாறு ​ பேசி​னார்​.

காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வோம்: தமிழகம் போராடி வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி
நீதிமன்ற உத்தரவை மீறுவதை ஏற்க முடியாது: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப அவமதிப்பு வழக்கில் நீதிபதி திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in