விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த ஆட்​சிக் காலங்​களில் போராட்டங்களில் ஈடு​பட்​ட​தாக போடப்​பட்ட 600 வழக்​கு​களில் இருந்து 92 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விவசாயிகள், ஆசி​ரியர்​கள் விடுவிக்​கப்​படுவ​தாக தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இது​குறித்து உள்​துறை செயலர் ஏ.கார்த்​திக் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

தமிழகத்​தில் விவசாயிகள் மற்​றும் ஆசி​ரியர்​கள் தங்​கள் கோரிக்​கைகளுக்​காக அமைதி​யான முறை​யில் போராடியபோது அவர்​கள் மீது கடந்த ஆட்​சிக் காலங்​களில் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​கள் திரும்ப பெறப்​படும் என்று முதல்​வர் விஜய் சட்​டப்​பேரவை​ கூட்டத் தொடரின்போது கடந்த செப்.2-ம் தேதி அறி​விப்பு வெளி​யிட்​டார்.

அவர் உத்​தர​வின்​படி 2021 மே முதல் 2026 ஏப்​ரல் மாதம் வரை விவசாயிகள் மற்​றும் ஆசி​ரியர்​கள் மீது போடப்​பட்ட 600 வழக்​கு​கள் கண்​டறிப்​பட்​டன. அவற்​றைத் திரும்ப பெறு​வது தொடர்​பாக உரிய சட்ட விதிகளின்​படி ஆய்வு செய்​யப்​பட்​டது.

இதையடுத்து அந்த வழக்​கு​களில் பதிவு செய்​யப்​பட்ட சுமார் 92 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விவசாயிகள், ஆசி​ரியர்​களை வழக்​கு​களில் இருந்து விடுவித்து தற்​போது ஆணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை

X