வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை

நெல்லூர் அருகே 20-ம் தேதி மிகத் தீவிர புயலாக கரையைக் கடக்கும்
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை
Updated on: 
1 min read

சென்னை: வங்​கக்​கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் நேற்று ‘அக்​வான்’ புய​லாக மாறியது. இது மிகத் தீவிர புய​லாக வலுப்​பெற்று, ஆந்​திர மாநிலம் நெல்​லூர் அருகே 20-ம் தேதி கரையை கடக்​கக்​கூடும். இதனால் சென்னை, செங்​கை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் 18, 19-ம் தேதி​களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

இது​தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு:

வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் வடக்கு, வடமேற்கே நகர்ந்து நேற்று ‘அக்​வான்’ (Akvan) புய​லாக வலுப்பெற்​றது. இது மேலும் வலுப்​பெற்று மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகுதி​யில் இன்று மாலை தீவிர புய​லாக நில​வக்​கூடும்.

இது மேலும் வலு​வடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.20-ம் தேதி நண்​பகல் மிகத் தீவிரப் புய​லாக நெல்​லூர் - துனி இடையே ஆந்திரகடற்​கரையை கடக்க வாய்ப்புள்​ளது. அப்​போது மணிக்கு 120-130 கி.மீ. வேகத்​திலும், இடை​யிடையே 145 கிமீ வேகத்​திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இதன் காரண​மாக, இன்று தமிழகத்​தின் மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்கால் பகுதி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

18, 19-ம் தேதி​களில் சென்னை, திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் (40-50 கிமீ வேகம்) மிக கனமழையும் காஞ்​சி, ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் கனமழையும் பெய்​யக்​கூடும். மற்ற பகுதி​களில் லேசான மழையும் பெய்​யக்​கூடும். வட கடலோரப் பகுதி​களில் இன்றும், நாளை​யும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே அங்கு மீனவர்​கள் செல்லவேண்டாம்.

ஆணையம் அறிவுறுத்தல்

இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: வானிலை தொடர்​பான கணிப்​பு​களை வெளி​யிடும் சில தனி நபர்​கள் மாறு​பட்ட கணிப்​பு​கள், மதிப்​பீடுகளை பரப்பி வரு​வது கவனிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிடும் அதி​காரப்​பூர்வ முன்​னறி​விப்​பு​களுக்​கு மாறாக முரண்​பட்ட வானிலை முன்​னறி​விப்​பு​கள் மக்​களிடம் தேவையற்ற அச்​சம், பதற்​றத்தை ஏற்​படுத்​தக் கூடும். எனவே, அரசின் துறைகள் வெளி​யிடும் தகவல்​களை மட்​டுமே பொது​மக்​கள் பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் நாளை மிக கனமழை
புத்தக கொள்முதல் முறைகேடு: அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது

X