“இருமொழிக் கொள்கைதான்” - பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

‘மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்’
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம். தவெகவின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான்’ என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்து சேரவில்லை. இது மாணவர்களுக்கானது. எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேசமயம் எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணிபவர்கள் கிடையாது. கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இருமொழிக் கொள்கை என்பது கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. அதில் மாற்றுக் கருத்தே கிடையாது” என்று கூறினார்.

பிஎம்ஸ்ரீ திட்டம் பின்புலம்

மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது. இதன்​மூலம் பள்​ளி​களின் கட்​டமைப்பு வசதி​கள் மேம்படுத்தப்பட்டு வரு​கின்​றன. ஆனால், இந்த திட்​டத்​தில் மும்​மொழிக் கொள்கை இருப்​ப​தால் தமிழகம் இணைய மறுத்​து​விட்​டது. இதன் காரண​மாக, ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம் மூல​மாக தமிழகத்​துக்கு தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் மத்​திய அரசு நிறுத்தி வைத்​தது.

இந்த விவ​காரம் கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது. இதன் தொடர்ச்சியாக, மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யது. பிஎம்ஸ்ரீ பள்​ளித் திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தவெக தலை​மை​யில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்​திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு ​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா, நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை மத்​திய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும் என பல கேள்வி​கள் எழுந்​தது கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்</p></div>
தமிழகத்துக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்கிட பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in