‘டெண்டர்’ கோவனும், சீட்டுக்கு ‘சி’ வசூலும் | உள்குத்து உளவாளி

‘டெண்டர்’ கோவனும், சீட்டுக்கு ‘சி’ வசூலும் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

பிஹார் விக்டரிக்குப் பிறகு, ‘மேல இருக்கறவங்க’ எப்படியாச்சும் நம்மைச் ஜெயிக்க வெச்சிருவாங்க என்ற தைரியமும் தெம்பும் மாளிகைக் கட்சியில் இருக்கும் பலருக்கும் வர ஆரம்பித்திருக்கிறதாம். இதையடுத்து, அந்தக் கட்சியில் ‘சீட்’ பிடிக்கும் ஓட்டத்தில் இப்போது டிராஃபிக் ஜாம் ஆகி வருகிறதாம்.

எடக்கானவருக்கு எல்லாமுமான சேலத்து ‘டெண்டர்’ கோவனுக்கு சேலம் அருகே இருக்கும் ‘பாளையம்’ கிராமத்தில் தனியாக ஒரு வீடு இருக்கிறது. முக்கியமான ‘டீல்’ சமாச்சாரங்களை இங்கு தான் தலைவர் கோவன் தர்பாராய் நடத்தி முடிப்பாராம். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி இடத்துடன் அமைந்திருக்கும் அந்த வீட்டில் தான் இப்போது ‘சீட்’ வசூல் சமாச்சாரங்கள் ஏகபோகமாய் நடக்கிறதாம்.

பொதுத் தொகுதியாக இருந்தால் 10-ம், ரிசர்வ் தொகுதியாக இருந்தால் 3 முதல் 5-ம் பெரிய நோட்டில் சுளையாக வாங்கிக் கொண்டு, “உங்களுக்குத்தான் சீட்டு... ஹேப்பியா போயிட்டு வாங்க” என்று உற்சாகமூட்டி அனுப்புகிறாராம் ‘டெண்டர்’ கோவன். கடந்த 10 நாளைக்கு முன்பாக இப்படி சீட்டுக்காக ரிசர்வ் செய்ய வந்தவர்கள் வந்திறங்கிய கார்கள் மட்டுமே சுமார் 100 எண்ணிகையில் ‘பாளையத்து’ வீட்டு வளாகத்தில் வரிசைகட்டி நின்றதாம்.

இதனிடையே, கரூர் மாவட்டத்திலும் இதுபோல் சீட்டுக்கு ‘சி’க்களை வசூலித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அந்த மாவட்டத்தின் ‘விஜய’மானவர் விவகாரத்தை எடக்கானவரின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம். “அவரா... அப்படியா செஞ்சாரு?” என்று ரியாக் ஷன் காட்டிய எடக்கானவர், “விசாரிப்போம்” என்று மையமாகச் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

ஆனால், ‘டெண்டர்’ கோவனின் பாஸ்ட் ஹிஸ்ட்ரியை படித்த முன்னாள் எம்எல்ஏ-க்களோ, “அப்பாவுக்கும் மகனுக்கும் தெரியாமலா அவரு பொட்டியத் திறந்து வெச்சுட்டு உக்காந்திருக்காரு?” என்று நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்களாம்.

‘டெண்டர்’ கோவனும், சீட்டுக்கு ‘சி’ வசூலும் | உள்குத்து உளவாளி
நிவாரணம் அனுப்பிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் நன்றி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in