தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு ரூ.531 கோடி

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு ரூ.531 கோடி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள தேசிய நெடுஞ்​சாலைகளில் மேம்​பாலங்​கள் அமைக்​கும் பணி​களுக்​காக நடப்பு நிதி​யாண்​டில் (2026-27) ரூ.531.54 கோடியை மத்​திய அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது.

சமீபத்​திய புள்ளி விவரங்​களின்​படி, இந்​தி​யா​வின் தேசிய நெடுஞ்​சாலைகளின் மொத்த நீளம் சுமார் 1,46,560 கி.மீ. ஆகும். தேசிய நெடுஞ்​சாலைகளில் சாலை அமைப்​பதும், பராமரிப்​பது உள்​ளிட்ட பணி​களை மத்​திய சாலை போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலை அமைச்​சகம், இந்​திய தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் ஆகியவை மேற்​கொள்​கின்​றன.

தேசிய நெடுஞ்​சாலைகளில் மேம்​பாலங்​கள் அமைக்​கும் பணிக்​காக, ‘சேது பந்​தம் திட்​டம்’ 2016-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. பின்​னர் இது, சேது பாரதம் திட்​ட​மாக மாற்​றப்​பட்​டது. இத்​திட்​டத்​தில், தேசிய நெடுஞ்​சாலை​யில் உள்ள ரயில்வே கேட்​களை அப்​புறப்​படுத்தி மேம்​பாலங்​கள் கட்​டும் திட்​ட​மும் விரிவுப்​படுத்​தப்​பட்​டது.

இத்​திட்​டத்​தின்​படி, தேசிய நெடுஞ்​சாலைகளில் ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதில், நாடு​முழு​வதும் 230 ரயில்வே கேட்​கள் தேசிய நெடுஞ்​சாலைகளில் இருப்​பது கண்​டறியப்​பட்​டன. தமிழகத்​தில் 9 ரயில்வே கேட்​கள் கண்​டறியப்​பட்​டு, தற்​போது வரை 6 கேட்​களை அகற்றி மேம்​பாலங்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. திருச்​சி​யில் மேம்​பாலம் பணி முடி​யும் தரு​வா​யில் உள்​ளது.

நீடா​மங்​கலம் மேம்​பாலப் பணி ரூ.170 கோடி​யில் கடந்த ஆண்டு தொடங்​கப்​பட்​டது. ஆம்​பூர் ரெட்​டித் தோப்பு பகு​தி​யில் ரயில்வே மேம்​பாலம் பணி ரூ.65.98 கோடி​யில் பணி நடை​பெறுகிறது. இந்த இரண்டு பணி​களுக்​காக நடப்பு நிதி​யாண்​டில் ரூ.81.54 கோடியை மத்​திய அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது.

இதுத​விர, தமிழகத்​தில் நெடுஞ்​சாலை​யில் உள்ள மேம்​பாலப் பணி​களுக்கு நடப்பு நிதி​யாண்​டில் ரூ.450 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. மொத்​தம் ரூ.531.54 கோடியை மேம்​பால பணி​களுக்கு மத்​திய அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது. இதுகுறித்​து, ஓய்​வு​பெற்ற ரயில்வே தொழிற்​சங்க தலை​வர் மனோகரன் கூறும்​போது, “தமிழகத்​தில் ரயில்வே கேட்​களை அகற்​றி, மேம்​பாலம் அமைக்​கும் பணிகள் முடி​யும் தரு​வா​யில் உள்​ளன. இது​போல, நாடு முழு​வதும் மாநில நெடுஞ்​சாலைகளில் உள்ள ரயில்வே கேட்​களை அப்​புறப்​படுத்த, சேது பாரதம் திட்​டத்தை விரிவுபடுத்த வேண்​டும்’’ என்றார்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு ரூ.531 கோடி
“இண்டியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளது; 23 கட்சிகள் பங்கேற்க உள்ளன”: காங்கிரஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in