​டாஸ்மாக்​ மது விற்பனை தனியார்​ மயமாகிறது: அமைச்சர்​ விக்னேஷ் சூசக தகவல்​

திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், பயனாளிக்கு நலத்திட்டங்கள் வழங்கிய  அமைச்சர் விக்னேஷ்.

திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், பயனாளிக்கு நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர் விக்னேஷ்.

Updated on
1 min read

திண்​டுக்​கல்​: மது​பான விற்​பனை​யில்​ ரெஸ்​டோ பார்​, தனி​யார்​ம​யம்​ குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. டாஸ்​மாக்​ தனி​யார்​ மயமாகிறது என தமிழக மது​விலக்​கு மற்​றும்​ ஆயத்​தீர்​வை துறை அமைச்​சர்​ விக்​னேஷ் தெரி​வித்​தார்​.

திண்​டுக்​கல்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ அலு​வல​கத்​தில்​ பல்​வேறு துறை அதி​காரி​களு​ட​னான ஆய்​வுக்​ கூட்​டம்​, மாவட்​ட ஆட்​சி​யர்​ துர்​காமூர்த்​தி முன்​னிலை​யில்​ நேற்​று நடை​பெற்​றது. அமைச்​சர்​ விக்​னேஷ் கலந்​து​கொண்​டு துறை​வாரி​யாக வளர்ச்​சித்​ திட்​டங்​கள்​ குறித்​து ஆய்​வு நடத்​தி​னார்​. தொடர்ந்​து முடிவுற்​ற திட்​டப்​ பணி​களை திறந்​து​வைத்​து, பயனாளி​களுக்​கு நலத்​திட்​ட உதவி​களை வழங்​கி​னார்​.

பின்​னர்​ அமைச்​சர்​ செய்​தி​யாளர்​களிடம்​ கூறிய​தாவது: தமிழகம்​ முழு​வதும்​ மது​பானக்​ கடைகளில்​ மது​பாட்​டில்​கள்​ தேக்​கமடைந்​துள்​ளதை திரும்​பப்​பெற கோரப்​பட்​டுள்​ளது. மது குடிப்​போர்​ எதை விரும்​பு​கிறார்​களோ, அந்​த மது பாட்​டில்​களை மட்​டும்​ கொள்​முதல்​ செய்​ய முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. திண்​டுக்​கல்​ அரு​கே சிறுமலை, ஜல்​லிப்​பட்​டி பகு​தி​களில்​ சில்​லிங்​ மது விற்​பனை செய்​பவர்​கள்​ மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​. எங்​கிருந்​து மது​பாட்​டில்​களை வாங்​கு​கிறார்​கள்​ எனக்​ கண்​டு​பிடித்​து, மது​பாட்​டில்​களை விற்​பனைக்​கு கொடுத்​தவர்​கள்​ மீதும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​.

ரெஸ்​டோ பார்​, தனி​யார்​மயம்​ என்​பது குறித்​து கலந்​து ஆலோ​சித்​தோம்​. மது விற்​பனை தனி​யார்​மய​மாகிற​தா என்​றால்​ ஆமாம்​, இந்​த துறையை சரிசெய்​ய பல்​வேறு நடவடிக்​கை​களில்​ இறங்​கி உள்​ளோம். ஆனால்​, மக்​கள்​ வேண்​டாம்​ என்​றால்​ இந்​த அரசு அதை செய்​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​. நிலக்​கோட்​டை எம்எல்​ஏ அய்​ய​னார்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், பயனாளிக்கு நலத்திட்டங்கள் வழங்கிய  அமைச்சர் விக்னேஷ்.</p></div>
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in