சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் சிக்​குன்​குனியா பாதிப்பு அதி​கரித்து வரு​வ​தால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்​படுத்த வேண்​டும். மருத்​து​வ​மனை​களில் சிறப்பு வார்​டு​களை அமைக்க வேண்​டும் என்று மாவட்ட சுகா​தார அதி​காரிகளுக்கு பொது சுகா​தா​ரத் ​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் உத்​தர​விட்​டுள்​ளார்.

தமிழகத்​தில் கடந்த சில மாதங்களாகவே சிக்​குன்​குனி​யா​ தாக்​கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட சுகா​தார அதி​காரி​களுக்கு பொது சுகா​தா​ரத் ​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் அனுப்​பி​ய சுற்​றறிக்​கை:

சிக்​குன்​குனியா பாதிப்பு இருப்​ப​தால், உரிய கண்​காணிப்​புடன் கூடிய நோய் தடுப்பு நடவடிக்​கைகளை, அனைத்து மாவட்​டங்​களி​லும் மேற்​கொள்ள வேண்​டும். மருத்​து​வ​மனை​கள், ஆய்​வகங்​களில் உரிய நேரத்தில் சிக்​குன் குனியா பரிசோதனை​களை மேற்கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்​டும்.

டெங்கு அல்​லது சிக் குன்​குனி​யா​வுக்கு சிகிச்சை தர தனி வார்​டு அமைக்க வேண்டும். பாதிப்பை கண்​டறி​யும் எலிசா பரிசோதனைக்கு தேவை​யான உபகரணங்​களை இருப்​பில் வைக்க வேண்​டும்.

மாவட்ட ஆட்​சி​யர்​கள் தலை​மை​யில் நோய் தடுப்பு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டு, வீடு​தோறும் கொசு உற்​பத்​தியை கண்​காணிப்​ப​தற்​கான பணி​யில் போதிய நபர்​கள் ஈடு​படுத்​தப்பட வேண்​டும். ஏடிஸ் கொசுக்​களை சேகரித்து ஆய்​வுக்கு அனுப்ப வேண்​டும். சிக்​குன்​குனியா பா​தித்தால் காய்ச்சல், மூட்டு வலி, அதீத தசை வலி, உடல் அசதி அறிகுறிகள் ஏற்​படும்​. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி வசூலிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in