ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கி வசூலிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா

Updated on
1 min read

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மானவரி பாக்​கியை வசூலிக்​கும் நடவடிக்​கைகளை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்க வரு​மான வரித் துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​னாள் முதல்​வ​ர் மறைந்த ஜெயலலிதா செலுத்த வேண்​டிய ரூ.13 கோடி வரு​மான வரி பாக்​கியை செலுத்​தும்​படி அவரது சட்​டப்​பூர்வ வாரிசு​தா​ரர்கள் ஜெ.தீபா மற்​றும் ஜெ.தீபக்​குக்கு வரு​மானவரித் துறை நோட்​டீஸ் பிறப்​பித்​தது. இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது வரு​மானவரித் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்​தர​விடப்​பட்டது. இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக நேற்று மீண்​டும் விசாரணைக்கு வந்​தது. அப்​போது வரு​மான வரித் துறை பதில் மனு தாக்​கல் செய்​ய​வில்லை என சுட்​டிக்​காட்டப்​பட்​டது.

அதையடுத்து இது தொடர்​பாக இரு வாரங்​களில் பதிலளிக்க வரு​மானவரித்​துறைக்கு உத்​தர​விட்ட நீதிப​தி, அது​வரை வரி​பாக்கி வசூல் நடவடிக்​கையை தற்​காலிக​மாக நிறுத்திவைத்து உத்​தர​விட்​டார்​.

<div class="paragraphs"><p>முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா</p></div>
தவெக பிரச்சாரம் 26 முதல் தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in