எரிசக்தி துறை மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு - கலிபோர்னியா பல்கலை. ஒப்பந்தம்

முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில் கையெழுத்து
எரிசக்தி துறை மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு - கலிபோர்னியா பல்கலை. ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்​சா​ரத் துறை வளர்ச்சி மற்​றும் பசுமை எரிசக்தி பயன்​பாட்டை வலுப்​படுத்​தும் நோக்​கில் அமெரிக்​கா​வின் பெர்க்​லி​யில் உள்ள புகழ்​பெற்ற கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்​துள்​ளது.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், தமிழக அரசின் எரிசக்​தித் துறை செயலர் மங்​கத் ராம் சர்​மா​வும், கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தின் துணைத் தலை​வரும் (கல்வி திட்​ட​மிடல்) புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், தமிழ்​நாடு மின் உற்​பத்தி மற்​றும் பகிர்​மானக் கழகத் தலை​வர் மற்​றும் மேலாண் இயக்​குநர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், இணை மேலாண் இயக்​குநர் (நி​தி) விஷுமஹாஜன், தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்​குநர் எஸ்​.அனீஷ் சேகர், தமிழ்​நாடுமின் உற்​பத்தி கழக மேலாண் இயக்​குநர் ம.கோ​விந்த ராவ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த ஹிரோசே நிறு​வனம், ரூ.100 கோடி முதலீட்​டில் 100 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் மின்​சார, மின்​னணு இணைப்​பிகள் உற்​பத்​தித் திட்​டம் அமைப்​ப​தற்​கும் முதல்​வர் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

புதிய ஆலைக்கு அடிக்​கல்

காஞ்​சிபுரம் மாவட்​டம் சிப்​காட் பிள்​ளைப்​பாக்​கம் தொழிற்​பூங்​கா​வில் ரூ.500 கோடி முதலீட்​டில் 200 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும் வகை​யில் அசோக் லேலண்ட் நிறு​வனம் மின்​கலன் தொகுப்பு உற்​பத்தி ஆலை அமைக்க உள்​ளது.

தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்த புதிய ஆலை அமைப்​ப​தற்கு காணொலி காட்சி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லின் அடிக்​கல் நாட்டி​னார்.

மேலும், ரூ.119.06 கோடி மதிப்​பீட்​டில் 1,800 பேருக்கு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கும் வகை​யில் கரூர், புதுக்​கோட்​டை, நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களில் 3 புதிய டைடல் நியோ பூங்​காக்​கள் அமைப்​ப​தற்​கும் முதல்​வர்​ அடிக்​கல்​ நாட்​டி​னார்​.

எரிசக்தி துறை மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு - கலிபோர்னியா பல்கலை. ஒப்பந்தம்
எரிபொருள் விலை உயர்வு காரணமாக இன்று முதல் ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in