காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்

காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: இந்​தி​யா​வில் காலணிகள் மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​யா​வின் காலணி மற்​றும் தோல் பொருள்​கள் உற்​பத்​தி​யின் தலை​மை​யிட​மாகத் தமிழகம் திகழ்​கிறது.

இந்​தி​யா​வின் மொத்த தோல் ஏற்​றும​தி​யில் 47 சதவீத​மும், காலணி மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் 38 சதவீத​மும் தமிழகம் மட்​டுமே பங்​களிப்​பது பெரு​மைக்​குரிய சாதனை​யாகும்.

இந்​தத் துறை​யில் 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் பணிபுரிந்து வரு​கின்றனர். தோல் பொருள்​கள் ஏற்​றுமதி மூலம் 1.25 பில்​லியன் டாலர் மதிப்​புள்ள வரு​வாயை ஈட்​டு​வதன் மூலம் தமிழகத்​தின் பொருளா​தார வளர்ச்​சிக்​கு, குறிப்​பிடத்​தக்க மிகப்​பெரிய பங்​களிப்பை அளிக்​கிறது.

உலகளா​விய பிராண்​டு​கள் மற்​றும் முதலீட்​டாளர்​களை ஈர்த்​து, குறிப்​பாக, பெண்​கள் மற்​றும் கிராமப்​புற மேம்​பாட்​டுக்​கான கொள்​கைகளை வகுத்​துச் செயல்​படு​வது, உள்​ளடக்​கிய மற்​றும் நிலைத்​தன்​மை​யுள்ள வளர்ச்​சி​யைத் தமிழகம் உறு​திப்​படுத்​தி​யுள்​ளது என்​பதை உணர்த்​துகிறது. இவ்​வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்
மகளுக்கு நீதி கேட்டு தலைமைச் செயலக வாயிலில் திமுக கொடியை எரித்து காவலர் போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in