ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

கோவை: தமிழ்​நாட்​டில் அரசுப் பள்​ளி​களில் காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்​புவதே அரசின் தற்​போதைய இலக்கு என, அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

கோவை​யில் பல்​வேறு நிகழ்​வு​களில் பங்​கேற்க நேற்று வந்த பள்​ளிக் கல்​வித்​துறை மற்​றும் செய்​தித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன், விமான​நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் தெரிவித்​த​தாவது: முதல்​வர் விஜய்​யின் தொலைநோக்​குப் பார்​வை​யின்​படி, அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு உலக தரத்​திலான கல்வி கிடைப்​பதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடு​பட்டு வரு​கிறது. பள்​ளி​களின் உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​து​வதோடு, டிஜிட்​டல் தொழில்​நுட்ப வசதி​கள் மற்​றும் நவீன ஆய்​வகங்​கள் அமைக்​கும் பணி​கள் மாநிலம் முழு​வதும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

அரசின் நலத்​திட்​டங்​கள் மற்​றும் சாதனை​கள் தங்​குதடை​யின்றி கடைக்​கோடி மக்​களை​யும் சென்​றடை​யும் வகை​யில், இத்​துறை நவீனமய​மாக்​கப்​பட்டு வரு​கிறது. சமூக ஊடகங்​களில் பரப்​பப்​படும் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் காலி பணி​யிடங்​களை விரைந்து நிரப்​புவதே தற்​போதைய முதன்மை இலக்​கு. மிக விரை​வில் ஆசிரியர் பணி​யிடம் நிரப்​பப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன்</p></div>
ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in