கடந்த ஓராண்டில் உடல் உறுப்பு தானம் வழங்கிய 312 கொடையாளர்களுக்கு தமிழக அரசு புகழஞ்சலி

கடந்த ஓராண்டில் உடல் உறுப்பு தானம் வழங்கிய 312 கொடையாளர்களுக்கு தமிழக அரசு புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த ஓராண்​டில் உடல் உறுப்பு தானம் வழங்​கிய 312 கொடை​யாளர்​களுக்கு புகழஞ்​சலி செலுத்தப்பட்டது.

உடல் உறுப்​பு​கள் தான விழிப்புணர்வ தினத்தை முன்​னிட்​டு, சென்னை திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள கலை​வாணர் அரங்​கில் நேற்று உடல் உறுப்​பு​கள் தானம் வழங்​கிய கொடை​யாளர்​களுக்கு புகழ் அஞ்​சலி செலுத்​தும் நிகழ்வு நடை​பெற்​றது.

இந்த நிகழ்​வில் காணொலி மூலம் பங்​கேற்ற சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ், புகழ் அஞ்​சலி செலுத்​தி, அவர்​களின் குடும்​பத்​தினருக்கு தமிழக அரசின் சார்​பில் நன்றி தெரி​வித்​தார். தொடர்ந்​து, சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது, 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உடல் உறுப்​பு​கள் தானம் வழங்​கிய 312 கொடை​யாளர்​களின் திரு​வுருவ படங்​களுக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

உடல் உறுப்​பு​கள் தானம் வழங்​கிய 312 கொடை​யாளர்​களின் குடும்​பத்​தினருக்கு நினைவு பரிசு மற்​றும் சால்வை அணி​வித்து கவுர​வித்​தார். உடல் உறுப்​பு​கள் தானத்​தின் போது பசுமை வழித்​தடங்​களை ஏற்​படுத்தி கொடுத்த சென்னை காவல் துறையைப் பாராட்டி கேட​யம் வழங்​கப்​பட்​டது.

தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்​பினர் செய​லா​ளர் மனோ​ராஜன் கூறுகை​யில் “தமிழகத்தில் 2008 முதல் 2026 வரை 2,550 உறுப்பு கொடை​யாளர்​களிடமிருந்து 14,845 உடல் உறுப்​பு​கள் தான​மாக பெறப்​பட்​டுள்​ளன.

தேசிய அளவில் இதய மாற்று சிகிச்​சை, நுரை​யீரல் மாற்று சிகிச்​சை​யில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. தொடர்ந்து 10 ஆண்​டு​கள் மத்​திய அரசின்​ தேசி​ய விரு​தினை தமிழகம்​ பெற்​றுள்​ளது”என்று தெரி​வித்​​தார்​.

கடந்த ஓராண்டில் உடல் உறுப்பு தானம் வழங்கிய 312 கொடையாளர்களுக்கு தமிழக அரசு புகழஞ்சலி
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in