சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார் - குடியரசு தின விழா கோலாகலம்

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசியக் கொடியை ஏற்றிய ஆளுநர் ரவி. உடன் முதல்வர் ஸ்டாலின்.

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசியக் கொடியை ஏற்றிய ஆளுநர் ரவி. உடன் முதல்வர் ஸ்டாலின்.

Updated on
1 min read

சென்னை: நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமாஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் ராணுவ படைப் பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவு, வான்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதன் பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதில் துணை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

<div class="paragraphs"><p>77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் தேசியக் கொடியை ஏற்றிய ஆளுநர் ரவி. உடன் முதல்வர் ஸ்டாலின். </p></div>
லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் ஆர்​ஜேடி செயல் தலை​வ​ரானார் தேஜஸ்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in