மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: 40 சதவீத​மாக நிர்ணயித்து அரசாணை

மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: 40 சதவீத​மாக நிர்ணயித்து அரசாணை
Updated on
1 min read

சென்னை: மாற்​றுத் திற​னாளி​களுக்கு டெட் தேர்ச்சி மதிப்​பெண்ணை 40 சதவீத​மாக குறைத்து பள்​ளிக்​கல்​வித் துறை அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக ​துறை செயலர் பா.சந்​தரமோகன் நேற்று வெளி​யிட்ட அரசாணை​: கடந்த ஜனவரி மாதம் வெளி​யிடப்​பட்ட அரசாணை​யின்​படி, ஆசிரியர் தகு​தி தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப்​பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் (150-க்கு 90), பிசி, பிசி-​முஸ்​லிம், டிஎன்​சி, மாற்​றுத் திற​னாளி​கள் 50 சதவீத​மும் (150-க்கு 75), எஸ்​சி, எஸ்​சி-அருந்​த​தி​யர், எஸ்டி வகுப்​பினர் 40 சதவீத​மும் (150-க்கு 60) பெற வேண்​டும்.

இந்​நிலை​யில், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா​வில் இருப்​ப​தைப் ​போல் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான டெட் தேர்ச்சி பெண்ணை 40 சதவீத​மாக நிர்​ண​யிக்குமாறு மாற்​றுத் திற​னாளி​கள் நல ஆணை​யர் அரசுக்கு கருத்துரு அனுப்​பி​யிருந்​தார். அதனை பரிசீலித்து மதிப்பெண்ணை 40 சதவீத​மாக நிர்​ணயித்து அரசு ஆணை​யிடு​கிறது.

மேலும் இந்​தப் புதிய தேர்ச்சி மதிப்​பெண் கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் நடத்​தப்​பட்ட டெட் தேர்​வுக்​கும், கடந்த 13-ம் தேதி வெளி​யிடப்​பட்​டுள்ள டெட் தேர்வு அறி​விப்​புக்​கும் பின்​பற்ற அனு​மதிக்​க ​படு​கிறது. இவ்​வாறு கூறியுள்ளது.

இதன்படி மாற்​றுத் திற​னாளி​கள் பிரி​வில் புதி​தாக தேர்ச்சி பெறுவோர் பட்​டியலை (தாள்-1 மற்​றும்​ ​தாள்​-2) ஆசிரியர்​ தேர்​வு ​வாரி​யம்​ விரை​வில்​ வெளி​யிடும்​ என எதிர்​​பார்​க்​கப்​படு​கிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: 40 சதவீத​மாக நிர்ணயித்து அரசாணை
தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in