தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு இலவச அறி​விப்​பு​களை தடை செய்​யக் கோரும் மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்றம் மறுத்​து​விட்​டது.

உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் தாக்கல் செய்​யப்​பட்ட பொதுநல மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு அதி​முக வெளி​யிட்​டுள்ள தேர்​தல் அறிக்​கை​யில் குடும்​பத் தலைவி​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை, ஆண்​களுக்கு கட்​ட​ணமில்லா பயணம், 5 லட்​சம் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானி​யத்தில் இரு சக்கர வாக​னம் போன்ற திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இது​போல தவெக தலை​வர் விஜய் எல்லா வீட்​டுக்​கும் மோட்​டார் சைக்​கிள், அனை​வருக்​கும் நிரந்தர வீடு உள்​ளிட்​ட​வற்றை அறி​வித்​துள்​ளார்.

திமுக​வும் கடந்த தேர்​தலைப் போல இந்த தேர்​தலுக்​கும் இலவச திட்​டங்​களை அறி​வித்​துள்​ளது. இது​போன்ற இலவச திட்​டங்​களால் தமிழ்​நாட்​டின் கடன் சுமை 9 லட்​சம் கோடி ரூபா​யாக அதி​கரித்​துள்​ளது. பொருளா​தார வளர்ச்சி ஏற்​பட​வில்​லை. மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்​படு​கிறது.

எனவே இலவச வாக்​குறு​தி​களின் சாத்​தி​யக்​கூறுகளை நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி நிபுணர்களை கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்​டும். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்டு இலவச வாக்​குறுதி திட்​டங்​களை அரசி​யல் கட்​சிகள் அறிவிக்க தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரரர் சார்​பில் இந்த மனுவை விசா​ரித்து உரிய உத்​தரவு பிறப்​பிக்க கோரப்பட்டது.

அப்​போது தலைமை நீதிப​தி, ‘‘தேர்​தல் காலங்​களில் இது​போன்ற ரிட் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்படு​வது நிறுத்​தப்பட வேண்டும். தமிழகம் மற்றும் கேரள தேர்​தலை முன்​னிட்டு இதுபோன்ற ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விரைந்து வி​சா​ரிக்க வேண்டிய அவசி​யம் இல்​லை. உரிய நேரத்​தில் வி​சா​ரணைக்​கு எடுத்​துக்​ கொள்​ளப்​படும்​" என்​றார்​.

தேர்தலை முன்னிட்டு இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரும் மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
“தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது” - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in