“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” - மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர், டி.கே.சிவகுமார்

மாணிக்கம் தாகூர், டி.கே.சிவகுமார்

Updated on: 
1 min read

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகம் ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.

தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

மேகேதாட்டுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்.

காவிரி உரிமைக்காகத் தமிழகம் எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழகத்தின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மாணிக்கம் தாகூர்,&nbsp;டி.கே.சிவகுமார்</p></div>
மேட் ஹென்றி அசத்தல் பந்து வீச்சு: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது நியூஸி.

X