மேட் ஹென்றி அசத்தல் பந்து வீச்சு: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது நியூஸி.

4-வது போட்டியில் 244 ரன் வித்தியாசத்தில் வெற்றி
மேட் ஹென்றி அசத்தல் பந்து வீச்சு: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது நியூஸி.
Updated on: 
2 min read

மவுண்ட் மவுங்கனி: இந்​தியா - நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 4-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெற்​றது. டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 333 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக தொடக்க வீரரான வில் யங் 108 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் 125 ரன்​கள் விளாசினார். இது அவரது 5-வது சத​மாக அமைந்​தது. முன்​னதாக அவர், 5 ரன்​களில் இருந்த போது இரு முறை ஆட்​ட​மிழப்​ப​தில் இருந்து தப்​பித்​தார். அகிப் நபி வீசிய அடுத்​தடுத்த பந்​துகளில் கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் கோட்டை விட்​டனர். இதற்​கான பலனை இந்​திய அணி அனுபவித்​தது.

வில் யங்​குக்கு உறுதுணை​யாக விளை​யாடிய டிம் ஷெய்​பர்ட் 48 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​கள் சேர்த்​தார். இது அவரது முதல் அரை சத​மாக அமைந்​தது. ஃபின் ஆலன் 41, கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் 24 ரன்​கள் எடுத்​தனர். இந்​திய அணி தரப்​பில் அகிப் நபி, குர்​னூர் பிரார், அக்​சர் படேல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

ஒரு கட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 350 ரன்​களுக்கு மேல் குவிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் வில் யங் ஆட்​ட​மிழந்த பின்​னர் அந்த அணி​யின் ரன் குவிப்​பில் சுணக்​கம் ஏற்​பட்​டது. அவர், வெளியேறிய போது ஸ்​கோர் 37 ஓவர்​களில் 256 ஆக இருந்​தது. கடைசி 10 ஓவர்​களில் 68 ரன்​கள் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டது.

334 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்​கெட்​களை பறிகொடுத்து தோல்​வி​யின் பிடி​யில் சிக்​கியது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் நடையை கட்​டினர். ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 3 விக்​கெட்​களை பறிகொடுத்த இந்​திய அணி​யால் அதன் பின்​னர் மீள முடி​யாமல் போனது.

மற்​றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்​வாட் 5 ரன்​களில் கைல் ஜேமிசன் பந்​தில் வெளியேற 9 ரன்​களுக்கு 4 விக்​கெட்​கள் என நிலைமை மோச​மானது. அப்​போது அக்​சர் படேல் கொடுத்த எளிதான கேட்ச்சை நிக் கெல்லி தவறவிட்​டார். இத​னால் சற்று தாக்​குப்​பி​டித்து விளை​யாடிய அக்​சர் படேல் 21 ரன்​களில் மேத்யூ பிஷர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து இஷான்​கிஷன் 27 ரன்​களில் மேட் ஹென்றி பந்​தில் போல்​டானார்.

அகிப் நபி 5, குல்​தீப் யாதவ் 1, நமன் திர் 21, குர்​னூர் பிரார் 2 ரன்​களில் நடையை கட்ட இந்​திய அணி 26.4 ஓவர்​களில் 89 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இத​னால் நியூஸிலாந்து அணி 244 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் மேட் ஹென்றி 9.4 ஓவர்​களை வீசி 2 மெய்​டன்​களு​டன் 27 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார். மேத்யூ பிஷர் 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினார்.

5 போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. முதல் 2 ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி வெற்றி கண்​டிருந்​தது. 3-வது ஆட்​டம் மழை காரண​மாக ரத்து செய்​யப்​பட்டு இருந்​தது. கடைசி மற்​றும் 5-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்​தில் நாளை (15-ம் தேதி) நடை​பெறுகிறது.

மேட் ஹென்றி அசத்தல் பந்து வீச்சு: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது நியூஸி.
சீராகிறது மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்: தற்போதைய நிலை என்ன?

X