தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
Updated on
1 min read

‘ஒவ்​வொரு குடும்பத்​தி​லும் பெண்​களுக்கு மாதம் ரூ.2,000 வழங்​கப்​படும். 3 லட்​சம் அரசு வேலை​வாய்ப்​பு​கள் நிரப்​பப்​படும்’ என்​பது உள்​ளிட்ட தேர்​தல் வாக்​குறு​தி​களை தமிழக காங்​கிரஸ் அறி​வித்​திருக்​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ் கட்​சிக்கு 28 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நிலை​யில், அக்​கட்​சி​யின் 2026-ம் ஆண்​டுக்​கான தேர்​தல் அறிக்​கையை கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவக்​கு​மார் நேற்று சத்​தி​யமூர்த்தி பவனில் வெளி​யிட்​டார்.

தேர்​தல் அறிக்​கை​யில், ‘குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு மாதம் ரூ.2,000 நேரடி​யாகப் பெண்​களின் வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​படும். அடுத்த 300 நாட்​களுக்​குள் அரசுத் துறை​களில் காலி​யாக உள்ள 3 லட்​சம் பணி​யிடங்​கள் அதிரடி​யாக நிரப்​பப்​படும்’ என்​பது உள்​ளிட்ட வாக்​குறு​தி​கள் இடம்​பெற்​றுள்​ளன.

நிகழ்ச்​சி​யில் பேசிய கார்த்தி சிதம்​பரம், “அடுத்த ஐந்து ஆண்​டு​களில் நாம் முன்​னெடுக்க வேண்​டிய மக்​கள் நலத் திட்​டங்​களையே அறிக்​கை​யாகத் தந்​துள்​ளோம். இதில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்​தால் முழு விவரங்​களை​யும் மக்​கள் அறிய​லாம்” என்​றார்.

மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், “மக்​கள் கருத்​துகளைக் கேட்​டுத் தயா​ரிக்​கப்​பட்ட இந்த அறிக்கை பாராட்​டுக்​குரியது” என்​றார். தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, “இந்த அறிக்கை சிறப்​பாக அமைந்​துள்​ளது,” என்று கூறினார்.

இறு​தி​யாகப் பேசிய டி.கே.சிவக்​கு​மார், “நாங்​கள் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறை​வேற்ற முடி​யாது என பாஜக​வினர் கர்​நாட​கா​வில் கூறி​னார்​கள். ஆனால், ஆறு மாதங்​களி​லேயே அனைத்​தை​யும் செய்து முடித்​துக் காட்​டினோம். அதே​போல்​தான் தமி​ழ​கத்​தி​லும் காங்​கிரஸ் - திமுக கூட்​டணி வெற்றி பெற்​று, மக்​கள் நலன் காக்​கும் திட்​டங்​களைச் செயல்​படுத்​தும்” என்​றார்.

முன்​ன​தாக டி.கே. சிவக்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “விஜய் ஒரு முதிர்ச்​சி​யற்ற அரசி​யல்​வா​தி. அவர் தன்​னுடன் தமிழ் மாநில காங்​கிரஸை வைத்​திருப்​பார் என்று நினைக்​கிறேன். இந்​திய தேசிய காங்​கிரஸ் அவருடன் இல்​லை. இந்​திய தேசிய காங்​கிரஸ் திமுக-வுடன் மட்​டுமே இருக்​கிறது. எங்​களது இடங்​களைக் குறைக்க திமுக நினைத்​தா​லும், காங்​கிரஸ் கட்​சி​யும் திமுக-​வும் அனைத்து மாநிலக் கட்​சிகளும் வலு​வாக இருக்க வேண்​டும் என்றே விரும்​பு​கின்​றன” என்​றார்.

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
“நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என தீர்மானிப்பது எதிரிகளே” - திமுக குற்றச்சாட்டுக்கு பழனிசாமி பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in