“கரூர் இடைத்தேர்தலுக்காகவே அரசு வேலை” - விஜய்யை சாடிய டி.கே.எஸ்.இளங்கோவன்

டி.கே.எஸ்.இளங்கோவன்

டி.கே.எஸ்.இளங்கோவன்

Updated on
2 min read

சென்னை: “கரூருக்கு விஜய் 12 மணிக்கு வந்து பேசிச் சென்றிருந்தால், அந்த மக்கள் அனைவரும் 1 மணிக்கு வீட்டுக்கே சென்டிருப்பார்கள். 7.30 மணி வரை மக்களை நிறுத்தி வைத்த ஒற்றைக் காரணத்தினால், ஆங்காங்கே அவர்கள் மயங்கி விழுந்தார்கள். இதைத் தவிர அங்கே கலவரம் நடக்கவில்லை; தள்ளுமுள்ளு நடக்கவில்லை. இப்போது இடைத்தேர்தலுக்காகவே அரசு வேலை வழங்கப்படுகிறது” என்று திமுகவின் செய்தித் தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கரூர் சம்பவத்தில் இதைவிட மோசமான ஒரு பொய்யை முதல்வர் சொல்ல முடியாது. அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்து விழுந்ததற்கு காரணம் காவல்துறை அல்ல; ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி தண்ணீர், உணவு இல்லாமல் 10 மணி நேரம் நின்றதாலேயே மயக்கமடைந்தன. பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூட செல்லமுடியாத நிலையில் இருந்தனர்.

விஜய் சொன்னபடி 12 மணிக்கே வந்து பேசிவிட்டுச் சென்றிருந்தால், அந்த மக்கள் அனைவரும் 1 மணிக்கு வீட்டுக்கே சென்றிருப்பார்கள். 7.30 மணி வரை மக்களை நிறுத்தி வைத்த ஒற்றைக் காரணத்தினால், ஆங்காங்கே அவர்கள் மயங்கி விழுந்தார்கள். இதைத் தவிர அங்கே கலவரம் நடக்கவில்லை; தள்ளுமுள்ளு நடக்கவில்லை. அவர்களின் உடல் எந்த அளவுக்கு வெயிலை தாங்கும் என்பதை யோசிக்க வேண்டும். அறிவுள்ள மனிதர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். விஜய், இதற்கும் சினிமா வசனம் யாராவது எழுதிக் கொடுத்தால் தான் பேச வேண்டும் என நினைக்கிறாரா?

100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், கரூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. அப்போது திமுக அரசு மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வந்து 100 பேரில் 60 பேரை காப்பாற்றியிருக்கிறது. 40 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் உயிரை காப்பாற்றியது எங்கள் அரசு. இதை மறந்துவிட்டு, பொய் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். இறப்பு என்பது இயற்கையாக நடந்தது.

அதில் மயக்கமடைந்தவர்களை யாரும் காப்பாற்றவில்லை. அங்கிருந்த கூட்டம் அனைத்தும் விஜய்யை பார்க்க வந்த கூட்டம்; விஜய் ரசிகர்கள், கீழே விழுந்தவர்களை காப்பாற்ற கூட மனசு வராமல் சில இடங்களில் அவர்கள் மீது எறிச் சென்றனர். அவர்களை உதைத்து தள்ளிவிட்டு செல்கிறார்களே தவிர, அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், தூக்கி உட்கார வைக்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை.

இந்த ரசிகர்களின் கூட்டத்திற்கு மத்தியில் தான் இச்சம்பவம் நடந்தது. ஒரு பெரிய கூட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க முடியாது. அந்த கூட்டத்தில் கலவரம் நடந்தால், காவலர்கள் உள்ளே நுழைந்து அந்த கலவரத்தை தடுக்கலாம்.

வெயிலிலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மயக்கம் போட்டு விழுந்ததை எப்படி கலவரம் என்று சொல்ல முடியும். மக்களை காக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த நாளையே விஜய் தொடங்கி இருக்கிறார். 7.30 மணி வரை வேண்டுமென்றே நிக்க வைத்திருக்கிறார்.

கரூரில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அதனால் அந்த மக்கள் தம்மீது கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காக அரசு வேலை வழங்குகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>டி.கே.எஸ்.இளங்கோவன்</p></div>
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூன் 18 வரை மிதமான மழை வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in