

சென்னை: கோடைக்காலத்தை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை - கரக்பூர் சிறப்பு ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஏப்.20) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் கரக்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கரக்பூரில் இருந்து ஏப்.21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் (06004) புறப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.
சென்னை - சந்திரகாச்சி
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.22-ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு ரயில் (06005) புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு மேற்குவங்கம் சந்திரகாச்சியை அடையும்.
மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (06006) புறப்பட்டு, சனிக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்.24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (06009) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கரக்பூரை சென்றடையும்.
மறுமார்க்கமாக, கரக்பூரில் இருந்து ஏப்.26-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் (06010) புறப்பட்டு, மறுநாள் இரவு 7.30 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - கரக்பூர் - ஈரோடு சிறப்பு ரயில்களுக்கான (06003-06004) டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. மற்ற ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.20) தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.