திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா? - விஷம் குடித்த தூத்துக்குடி தவெக நிர்வாகி

திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா? - விஷம் குடித்த தூத்துக்குடி தவெக நிர்வாகி
Updated on
1 min read

தூத்துக்குடி: ​தி​முக​வில் இருந்து வந்​தவர்​களுக்கு பதவி வழங்​கு​வ​தாகக் கூறி தூத்​துக்​குடி​யில் தவெக நிர்​வாகி விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்ற சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேலும் முதல்​வர் விஜய்க்கு அவர் வேண்​டு​கோள் விடுத்து வெளி​யிட்ட வீடியோவும் சமூக வலை​தளங்​களில் பரவி வரு​கிறது.

தவெக​வின் தூத்​துக்​குடி புறநகர் மாவட்ட செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான மதன்​ராஜா, மாவட்ட மற்​றும் ஒன்​றிய நிர்​வாகி​கள் சிலரை நீக்​கி​விட்​டு, புதி​ய​வர்​களுக்கு பொறுப்​பு​கள் வழங்கி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. அந்த வகை​யில் தூத்​துக்​குடி தெற்கு ஒன்​றிய செய​லா​ள​ராக இருந்த குழந்தை ராஜா என்​பவரை நீக்​கி​விட்​டு, திமுக​வில் இருந்து வந்த பாரத் என்​பவரை ஒன்​றிய செய​லா​ள​ராக அமைச்​சர் மதன்​ராஜா நியமித்​துள்​ளார்.

இப்​ப​தவி மாற்​றத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து குழந்தை ராஜா​வின் ஆதர​வாள​ரும், தவெக ஒன்​றிய இளைஞர் அணிசெய​லா​ள​ரு​மான முத்​துக்​குமரன் என்​பவர் விஷம் அருந்தி தற்​கொலைக்கு முயற்சி செய்​து,அதை வீடியோ எடுத்து வெளி​யிட்​டுள்​ளார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் இப்போது வேக​மாக பரவி வரு​கிறது.

மேலும் முதல்​வர் விஜய்க்கு வேண்​டு​கோள் விடுத்து அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோ​வில் பேசி​யிருப்​ப​தாவது: கடந்த 2000-ம் ஆண்​டில் இருந்து 26 ஆண்​டு​களாக உங்​களது தீவிர ரசிக​னாக பயணித்து வரு​கிறேன். நீங்​கள்​தான் என் உலகம், என் உயிர் என்று வாழ்ந்து வரு​கிறேன். நீங்​கள் கட்சி தொடங்​கிய​போது தீவிர​மாக பணி​யாற்​றினேன். நீங்​கள் முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​றிருப்​பது மிக்க மகிழ்ச்​சி​யளிக்​கிறது.

ஆனால், தூத்​துக்​குடி புறநகர் மாவட்​டம் ஓட்​டப்​பி​டாரம் சட்​டப்​பேரவைத் தொகு​தி​யில் நடக்​கும் குளறு​படிகளைப் பார்க்​கும்​போது உங்​களின் பெயர் தொடர்ந்து களங்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து உங்​களுக்கு பலமுறை இமெ​யில் அனுப்​பி​யுள்​ளேன். நேரில் பேச​வும் முயற்​சித்​தேன். ஆனால், எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

நமது கட்சி தேர்​தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக​வில் இருந்து புதி​தாக வந்​தவர்​களுக்கே கட்​சி​யில் முக்​கிய பொறுப்​பு​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இதனால் நமது கட்சி திமுக கூடார​மாக மாறி வரு​கிறது. உங்​களுக்​குக் கெட்​ட பெயர் ஏற்​படுத்​தும் நோக்​கிலேயே இங்​குள்ள நிர்​வாகி​கள் செயல்​பட்டு வரு​கின்​றனர் எனக் கூறிய​வாறே அவர் விஷம் அருந்​தும் காட்சி வீடியோ​வில் உள்​ளது. முத்​துக்​குமரன் மீட்​கப்​பட்​டு, தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா? - விஷம் குடித்த தூத்துக்குடி தவெக நிர்வாகி
மதுரைக்கு செப். 28-ம் தேதி வருகை தரும்போது மீனாட்சி அம்மனை தரிசிக்க முதல்வர் விஜய் திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in