கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் விற்​பனை செய்​யப்​படும் மது பாட்​டில்​களுக்கு கூடு​தலாக சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நல வரி விதித்து அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது மது​பான உற்​பத்​தி​யாளர்​கள் தற்​போது கலால் வரி மற்​றும் மதிப்​புக்​கூட்டு வரியை தமிழக அரசுக்கு செலுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் மது பாட்​டில்​களுக்கு கூடு​தலாக சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நல வரி​யும் விதிக்​கப்​பட​வுள்​ளது. தமிழ்​நாடு மதிப்பு கூட்​டப்​பட்ட வரி சட்​டத்​தின் கீழ் சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நல வரி விதித்து தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

ஒவ்​வொரு மது பாட்​டிலுக்​கும் அதன் அளவு மற்​றும் பாட்​டில் தயாரிக்​கப்​படும் பொருட்​ளுக்கு ஏற்ப வரி விதக்​க​வும், அதி​கபட்​ச​மாக ரூ.20 வரை விதிக்​கலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வரி வரு​வாயை மது​பாட்​டில்​களை மறுசுழற்சி செய்ய அல்​லது பாது​காப்​பாக அகற்​றும் பணி​களுக்​கும் மது பழக்​கத்​தால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் மறு​வாழ்​வுக்​கும் அவர்களின் குடும்​பங்​களுக்கு நிவாரணம் வழங்கவும், மது​வின் தீமை​கள் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்தவும், சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் வன உயிரினங்​களின் பாது​காப்பு நடவடிக்​கைகளுக்​காகவும் அரசு பயன்​படுத்​தும்.

மேலும் சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நலன் சார்ந்த பணி​களுக்​கும் பயன்​படுத்​தப்​படும் என அரசிதழில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்​றது முதல் மது​பான உற்​பத்​தி​யாளர்​கள் டாஸ்​மாக் கடைகளுக்கு வழங்​கும் ஒவ்​வொரு மது​பான பெட்​டிக்​கும் கூடு​தலாக ரூ.90 கட்​ட​ணம் பெறப்​படு​கிறது.

மேலும் மூலப்​பொருட்​களின் விலை மற்​றும் உற்​பத்தி செலவு அதி​கரித்​துள்​ள​தால் மது பானங்​களின் விலை உயர்த்த வேண்​டும் என உற்​பத்​தி​யாளர்​கள் கோரிக்கை வைத்​தனர்.

டாஸ்​மாக் நிர்​வாக​மும் இதுகுறித்து ஆலோ​சனை​களை மேற்​கொண்​டிருந்த நிலை​யில், தற்​போது கூடு​தலாக ரூ.20 வரை சுற்​றுச்​சூழல் மற்​றும் சமூக நல வரி விதிக்​கப்​பட்​டுள்​ள​தால் மது​பானங்​கள் விலை உயர வாய்ப்புள்​ளது.

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரகுபதி திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in