ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரகுபதி திட்டவட்டம்

ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரகுபதி திட்டவட்டம்
Updated on
1 min read

சென்னை: ‘ஜெம் கிரானைட் வீரமணிக்​கும், எங்​களுக்​கும் எந்​த தொடர்பும் கிடை​யாது என முன்​னாள் திமுக அமைச்​சர் ரகுபதி தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஜெம் கிரானைட் வீரமணிக்​கும் எங்​களுக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் கிடை​யாது. 2025 அக்​.6-ம் தேதி ஒரு தன்​னார்​வலர் வீடியோ பதிவுடன் புகார் அளித்தார். 7-ம் தேதியே எஃப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்டது.

எஃப்​ஐஆர் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​ட​போது, அந்த வீடியோ காட்​சி​யில் தெளி​வான முகம் கிடைக்​க​வில்​லை. ஆனாலும், நீதி​மன்​றத்​திலே நாங்​கள் வழக்கை வாபஸ் வாங்​கிக் கொள்​கிறோம் என்​றோ, டிராப் செய்​கிறோம் என்றோ சொல்​ல​வில்​லை. ‘

ஆதா​ரங்​கள் கிடைக்​கும் வரை பொறுத்​திருக்​கிறோம்; ஆதா​ரங்​கள் கிடைத்த பிறகு வழக்கு தொடரப்​படும்’ என்​று​தான் கூறி​யுள்​ளோமே தவிர, நாங்​கள் எந்த வழக்​கை​யும் வாபஸ் பெற​வில்​லை; கைவிட​வில்​லை.

புதிய ஆதா​ரங்​கள், சாட்​சிகள் கிடைக்​கும் பட்​சத்​தில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று​தான் குறிப்​பாணை​யைப் போக்சோ நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருக்​கிறது எங்​களு​டைய காவல் துறை.

அப்​படி இருக்​கும்​போது எப்​படி நாங்​கள் குற்​ற​வாளி​யாக முடி​யும்? அவரைப் காப்​பாற்ற நாங்கள் நினைக்கவில்லை. ஆக.29-ம் தேதி நீதி​மன்​றத்​தில் இருந்து இவர்​களுக்கு ஒரு புகார் வரு​கிறது. செப்​.21-ம் தேதி வரைக்​கும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

25 நாட்​களாக எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காமல் இருந்​து​விட்​டு, அதன்​பிறகு​தான் இதெல்​லாம் பேசுகிறார்​கள். போக்சோ வழக்​கில் எந்​தத் தகவலை​யும் வெளியே கசி​ய​விடக்​கூ​டாது. ஆனால் அமைச்​சர்​கள் செய்​தி​களை கசி​ய​விடு​கின்​றனர்.

இவ்​வாறு செய்​தி​கள் கசிந்து வந்​தாலே குற்​ற​வாளி தப்​புவதற்கு உதவி​யாக இருக்​கும். எனவே தகவல்​களைக் கசிய விடு​வது குறித்து சென்னை மாநகர ஆணை​யர் உரிய நடவடிக்​கை எடுக்க வேண்​டும்.

சேலத்​தில் 50-க்​கும் மேற்​பட்ட ஏழை எளிய பெண்​களை வன்​கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த தவெக நிர்​வாகி மணி​கண்​டனை மட்​டும் கைது செய்​து​விட்​டு, மேற்​கொண்டு அதில் யார் யார் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர் என விசா​ரிக்​காமல் வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்​பாற்ற முயற்​சிக்​கிறது அரசு.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது 2013-ல் ஜெயலலிதா ஆட்​சி​யில் இருந்​த​போதே புகார் கொடுக்​கப்​பட்​டது. அதை மறைத்​து​விட்டு 2025-ல் மட்​டும்​தான் புகார் கொடுத்​தது போல் சொல்​கின்​றனர்.

எது​வாக இருந்​தா​லும் உண்​மை​யைச் சொல்​லுங்​கள். வை​குண்​டம் எம்​எல்ஏ சம்​பந்​தப்​பட்ட வழக்​கில் நீதி​மன்​றத்​தையே ஏமாற்​றி​யிருக்​கிறது அரசு. வீரமணி எல்​லாருக்​கும் அறி​முக​மானவர்​தான். தவெக​வுக்கு இன்​னும் அறி​முக​மானவர்.

தவெக​வில் இருக்​கிற பலருக்கு அவர் ரொம்ப நெருங்​கிய சொந்​தக்​காரர் கூட. அதி​முக​வுக்​கும் சொந்​தக்​காரர்​தான். எல்​லாருக்​கும் தெரிந்​தவர்​தான். அதே​நேரம், நாங்​கள் அவரை எந்த விதத்​தி​லும் ஆதரிக்​க​வில்​லை. இதில் அவருக்​கும் எங்​களுக்​கும்​ எந்​த சம்​பந்​த​மும்​ இல்​லை. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரகுபதி திட்டவட்டம்
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: இளைஞர் சுட்டுப்பிடிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in