திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
Updated on: 
2 min read

புதுடெல்லி/சென்னை: திருப்​பரங்​குன்​றம் கோயில் மற்​றும் மலையை தொல்​லியல் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்ற கோரிக்​கையை நிராகரிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயிலுக்​குச் சொந்​த​மான மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்​துச் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்​தர​விட்​டிருந்​தார். மேலும் தொல்​லியல்​துறை​யினர் அனுமதி​யோடு கோயில் நிர்​வாகம் தரப்​பினர் தீபம் ஏற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டிருந்​தார். தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை சென்னை உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை அமர்​வும் உறுதி செய்​தது.

இந்த உத்​தரவுக்கு எதிராக கோயில் நிர்​வாகம், தமிழக அரசு, தர்கா நிர்​வாகம் தரப்​பிலும், அதேபோல தீபம் ஏற்ற பொது​மக்​களை அனுமதிக்க மறுத்​ததை எதிர்த்து ராம ரவிக்​குமார் என்​பவரும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்த நிலை​யில், அந்த மனுக்​களின் மீதான விசா​ரணை நிலுவை​யில் இருந்து வரு​கின்​றது.

அதேவேளை​யில், இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு சார்​பில் அதன் நிர்​வாகி கே.கே.ரமேஷ் என்​பவர் தாக்​கல் செய்த ரிட் மனுவில், திருப்​பரங்​குன்​றம் கோயில் மற்​றும் அதன் சுற்​றியுள்ள மலைப்​பகுதியை தொல்​லியல் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர வேண்​டும், 24 மணி நேர​மும் கோயி​லில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்​றப்​பட வேண்​டும் மற்​றும் கார்த்​திகை திருநாளின்​போது மலையைச் சுற்றி முழு​வதும் தீபம் ஏற்ற வேண்​டும் என கோரி​யிருந்​தார், அந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழக அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்​தது.

அதன் அடிப்​படை​யில் இந்து சமய அறநிலை​யத்​துறை ஆணை​யர் டி.ஜி.வினய் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள பதில் மனுவில் கூறி​யிருப்​ப​தாவது:

திருப்​பரங்​குன்​றம் கோயில் மற்​றும் முழு மலை​யின் உரிமை தொடர்​பாகத் தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கில், கடந்த 1923-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட தீர்ப்​பின்​படி மலை​யின் முழு​மையான உரிமை கோவிலுக்​குச் சொந்​த​மானது என்​பது திட்​ட​வட்​ட​மாக உறுதிப்​படுத்​தப்​பட்டு சட்​டப்​பூர்​வ​மாக நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், மலை​யில் உள்ள சில குறிப்​பிட்ட பகுதி​கள் மற்​றும் நெல்​லித்​தோப்பு தொடர்​பான எல்லைகள் வழக்​கு​களின் மூலம் முறை​யாக அளவீடு செய்​யப்​பட்டு வரையறுக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 150 ஆண்​டுகளுக்​கும் மேலாக, ஆகம விதி​களின்​படியும், கோயில் பரிந்​துரைகளின்​படியும், கோவில் பகுதிக்கு அரு​கில் உள்ள தீப மண்​டபத்​தில்​தான் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது.

மேலும், கடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி, கோயில் தேவஸ்தானம் மட்​டுமே பாரம்​பரிய​மான இடத்​தில் தீபம் ஏற்ற வேண்​டும் என்​றும், வேறு எங்​கும் தன்​னிச்​சையாகத் தீபம் ஏற்​று​வது தடை செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும் தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

எனவே, திருப்​பரங்​குன்​றம் மலைப் பகுதி​யிலும் சுற்​றியுள்ள இடங்​களி​லும் நில​வும் மத நல்​லிணக்​கச் சூழலைப் பாது​காக்​கவும், எந்​த​வித​மான வகுப்​புவாத மோதல்​களும் ஏற்​படா​மல் தடுத்​துப் பொது அமைதி​யைக் காக்​கவும் மாநில காவல்​துறையும், மாவட்ட நிர்​வாகமும் மட்​டுமே முழுப் பொறுப்​புடன் செயல்​பட்டு வரு​கின்​றன.

கோவில் மற்​றும் முழு மலை​யையும் இந்​தி​யத் தொல்​லியல் துறை​யின் கட்​டுப்​பாட்​டிற்கு மாற்ற வேண்​டும் என்ற கோரிக்கை முற்​றி​லும் சட்​டத்​திற்​குப் புறம்​பானது.

திருப்​பரங்​குன்​றம் கோயி​லில் பூஜைகள் ஆராதனைகள் மற்​றும் தீபம் ஏற்​றும் அனைத்து உரிமையும் கோயில் நிர்​வாகத்​துக்கு உரியது, எனவே மனுதா​ரரின் கோரிக்​கைகளை நிராகரித்து, மனுவை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
“தொழில் வளத்தை நாசமாக்கியதே 6 மாத கால விஜய் அரசின் சாதனை” - பழனிசாமி சாடல்

X