திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐவர் குழுவுக்கு பதிலாக கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்க அரசு தரப்பில் யோசனை

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐவர் குழுவுக்கு பதிலாக கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்க அரசு தரப்பில் யோசனை
Updated on
2 min read

மதுரை: நீ​தி​மன்​றம் தெரிவிக்​கும் 5 பேர் குழு​வுக்கு பதில் கோயில் குருக்​களை பூஜை செய்ய அனு​ம​திக்​கலாம் என திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கில் அரசு தரப்​பில் யோசனை தெரிவிக்கப்​பட்​டது. திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கின் நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​கள் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன.

மதுரை மாநகர காவல் ஆணை​யர், காவல் துணை ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், அறங்​காவலர் குழு​வினர் ஆஜராகினர். அறங்​காவலர் குழு தரப்​பில், நீதி​மன்​றம் தெரிவிக்​கும் 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனு​ம​திப்​பது தொடர்​பாக ஆலோ​சித்து வருவதாக தெரிவிக்கப்​பட்​டது.

காவல்​துறை சார்​பில், நீதி​மன்​றம் தெரிவிக்​கும் புதிய நடை​முறையை செயல்​படுத்த போதிய அவகாசம் தேவை எனக் கூறப் பட்​டது. அறங்​காவலர் குழு தரப்பில் 2 வார அவகாசம் கோரப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை நடை​முறைப்​படுத்​ததாதற்கு அறங்​காவலர் குழுவினரையும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் சேர்க்​கலாமா என நீதிபதி கேள்வி எழுப்​பி​னார். அரசு தரப்​பில், இந்த அவம​திப்பு வழக்கு விசாரணைக்கே உகந்​ததல்ல.

இந்த ஆண்டு கார்த்திகை திரு​விழா​வின்போது தீபத்​தூணிலும் தீபம் ஏற்ற வேண்​டும் என பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தர​வில் தொடரப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்​கில் 2 நீதிப​தி​கள் அமர்வு ஒரு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

அடுத்த ஆண்​டும் தீபம் ஏற்​றப்​பட ​வில்லை என்​றால் மட்​டுமே இந்த நீதி​மன்ற அவம​திப்பு வழக்கை விசா​ரிக்க முடி​யும். 2 நீதிப​தி​கள் அமர்வு ஒவ்​வொரு கார்த்​தி​கை​ திரு​விழா​வின் போதும் தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தனி நீதிபதி இந்த ஆண்டு தீபத்​தூணில் ஏற்ற வேண்​டும் எனக் கூறி​யுள்​ளார். தனி நீதிப​தி​யின் உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு மாற்றி உள்ள நிலை​யில், இந்த நீதி​மன்ற அவம​திப்பு விசா​ரணைக்கு உகந்​ததல்ல என்​றனர்.

தொடர்ந்து நீதிப​தி, நீதி​மன்ற உத்​தரவை மதிக்​கும் அடை​யாள​மாக தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​படும் என்​ப​தன் முன்​னெடுப்​பாகவே நீதி​மன்​றம் கூறும் 5 பேரை பூஜை செய்ய அனு​ம​திப்​பது குறித்து முடி​வெடுக்க கூறினேன் என்​றார்.

அதற்கு அரசுத் தரப்பில், நீதி​மன்​றம் கூறு​வதை ஆகம விதி​யின்​படி செய்​ய​லாமா என்​பதை முடிவு செய்ய அறங்​காவலர் குழு​வின் ஆலோ​சனை மற்​றும் துறை​யின் ஒப்​புதல் தேவை. எனவே அவகாசம் வழங்க வேண்​டும்.

அறங்​காவலர் குழு​வினரை அவம​திப்பு வழக்​கில் சேர்க்க வேண்​டாம் என வாதிடப்​பட்​டது. நீதிப​தி, தீபம் ஏற்​று​வது குறித்து முடி​வெடுப்​பது குறித்து ஆலோ​சிக்​கட்​டும். பூஜை செய்ய அனு​ம​திக்​கலாமே என்​றார்.

அதற்கு அரசுத் தரப்​பில், இது மதநம்​பிக்கை என்​ப​தால், முந்​தைய உத்​தர​வைப் போல கோயில் குருக்​கள் சென்று பூஜை செய்​யக்கூறலாமே என தெரிவிக்​கப்​பட்​டது. இதற்கு ஆடேசபம் தெரி​வித்த பிர​தான மனு​தா​ரர்​ தரப்​பு, அரசு காரணம் கூறி தப்​பிக்​கிறது.

அரசின் பெயரை காப்​பாற்ற வாதங்​களை முன்​வைக்​கின் றனர். எனவே கால அவசாகம் வழங்​கக் கூடாது என்​றனர். அதற்கு நீதிப​தி, எப்​படிப் பார்த்​தா​லும் அரசு நம்முடைய அரசு. தீபம் ஏற்றுவது தொடர்பாக பழைய அறங்காவலர் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து முடிவெடுத்து, நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதலைபெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-க்கு தள்ளிவைத்தார்.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐவர் குழுவுக்கு பதிலாக கோயில் குருக்களை பூஜை செய்ய அனுமதிக்க அரசு தரப்பில் யோசனை
நுழைவுவாயிலுக்கு இந்தியில் பெயர்: ‘தமிழர்களின் சூட்டை உணர வேண்டி இருக்கும்’ - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in