நுழைவுவாயிலுக்கு இந்தியில் பெயர்: ‘தமிழர்களின் சூட்டை உணர வேண்டி இருக்கும்’ - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

நுழைவுவாயிலுக்கு இந்தியில் பெயர்: ‘தமிழர்களின் சூட்டை உணர வேண்டி இருக்கும்’ - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: ​திருச்சி மண்டல ரயில்வே அலு​வலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைததற்கு கண்​டனம் தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டாலின், இந்தி திணிக்​கும் முயற்​சியை கைவிடா​விட்​டால், தமிழர்​களின் சூட்டை பாஜக அரசு உணர வேண்டி இருக்​கும் என எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இதே​போல் பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​களும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: இந்தித் திணிப்பு வெறி​யில் எல்லை மீறி சென்று கொண்​டிருக்​கிறது பாஜக. ‘மொழி ஒன்று - வரி வடிவம் மூன்​று’ எனும் வகை​யில் இந்தி பெயரையே தமிழ், ஆங்​கிலத்​தி​லும் எழுதி வைக்​கும் இழி​வான இந்தி திணிப்பு செயலில் பாஜக இறங்​கி​யுள்​ளது.

வருங்​கால வைப்பு நிதிஅலு​வல​கங்​களில் ஏற்​கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரை திணித்து விட்​டனர். மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சகத்​தின் பெயர் ‘ஜல் சக்​தி’ ஆகி​விட்​டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்ட பெயர் மாற்​றத்​தி​லும் இதே வேலையை தான் காட்​டி​னார்​கள்.

தற்​போது திருச்சி மண்டல ரயில்வே அலு​வலக நுழைவு வாயி​லில் ‘கர்​தவ்ய த்வார்’ என எழுதி வைத்​துள்​ளனர். நுழைவு வாயி​லிலேயே வாயில் நுழை​யாத பெயர். கொட்​ட​மும், ஆணவ​மும் கூடிக்​கொண்டே போகிறது.

தமிழர்​களின் சுயமரி​யாதையை சீண்டி பார்க்​கும் இவர்​களுக்கு சரி​யான பாடம் புகட்ட வேண்​டும். திருச்சி ரயில்வே அலு​வலக நுழைவு வாயி​லில் இந்தியை திணிக்​கும் முயற்​சியை கைவிட்​டு, சரி​யான தமிழ் பெயரை அங்கு இடம்​பெறச் செய்​ய​வேண்​டும். இல்​லை​யென்​றால் தமிழர்​களின் சூட்டை மத்​திய பாஜக அரசு உணர வேண்டி இருக்​கும் என எச்​சரிக்​கிறேன்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் உள்ள மத்​திய அரசின் நிறு​வனங்​களில் தமிழ், ஆங்​கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்​கள் குறிப்​பிடப்​படும் நிலை​யில், திருச்சி ரயில்வே அலு​வலக நுழைவு வாயி​லில் இந்தியில் பெயரிடப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வரு​கின்​றன.

பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு, தமிழ் மொழிக்​கான அங்​கீ​காரத்தை தொடர்ந்து அளித்​து​வரும் நிலை​யில், இது​போன்ற நிகழ்​வு​களை தவிர்க்​கப்பட வேண்​டும். திருச்சி ரயில்வே அலு​வலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்​சூட்​டிட வேண்​டும்.

இதே​போல் தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, பாமக தலை​வர் அன்​புமணி, தி.க. தலை​வர் கி.வீரமணி, இந்திய கம்​யூனிஸ்ட் கட்சிமாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், முக்​குலத்​தோர் புலிப்​படை கட்​சித் தலை​வர் கருணாஸ், எஸ்​டிபிஐ மாநிலத் தலை​வர் நெல்லை மு​பாரக் உள்​ளிட்​டோரும் கண்​டனம்​ தெரி​வித்​து, தமிழில்​ பெயர்​ சூட்ட வலி​யுறுத்​தினர்​.

நுழைவுவாயிலுக்கு இந்தியில் பெயர்: ‘தமிழர்களின் சூட்டை உணர வேண்டி இருக்கும்’ - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலின் இந்தி பெயர் நீக்கம்: திமுக போராட்டத்தின் எதிரொலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in