நல்லிணக்க உறவை தொடராததால் திமுகவை விட்டு வெளியேறினோம்: திருமாவளவன் விளக்கம்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on
1 min read

தருமபுரி: நல்​லிணக்க உறவை திமுக தொட​ரா​த​தால் தான் அந்​தக் கூட்​ட​ணி​யில் இருந்து விசிக உள்​ளிட்ட கட்​சிகள் வெளி​யேறும் நிலை ஏற்​பட்​ட​தாக தரு​மபுரி​யில் அக்கட்சியின் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

விசிக தலைமை நிலை​யச் செய​லா​ளர் தமிழ்ச்​செல்​வன் இல்​லத் திருமண விழா தரு​மபுரி​யில் நேற்று நடந்​தது. இதில் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: கூட்​டணி மாறி​விட்டோம் என்​பது​போல இன்று நமக்கு துரோகி பட்​டம் கட்டி காழ்ப்புணர்ச்​சி, வன்​மத்தைப் பரப்​பு​கி​றார்​கள். 1999-ல் நம்மை தேர்​தல் அரசி​யலுக்கு மூப்​ப​னார் இழுத்து வந்​தார். அதன் பின்​னர் திமுக, அதி​முக என சூழலுக்கு ஏற்ப கூட்​ட​ணி​யில் இடம்பெற்றோம்.

நம் இயக்​கத்​தில் இருந்த ஆதவ் அர்​ஜு​னா, ‘2026 சட்​டப் பேரவைத் தேர்​தலில் முதல்​வர் வேட்​பாள​ராக உங்​களை முன்​னிலைப் படுத்தி பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளலாம்’ என தெரி​வித்​தார். அந்த முடிவை நான் ஏற்​றிருந்​தால் அதி​முக-​பாஜக கூட்​டணி வலு​வடைந்​திருக்​கும். அன்று திமுக கூட்​டணி உடைந்​து​விடக் கூடாது என்​ப​தால் அதற்கு நான் இடம் தரவில்​லை.

இந்​நிலை​யில், கூட்​டணிக் கட்​சிகளிடையே நல்​லிணக்​கம், நல்​லுறவை பேணி பாது​காக்​கும் பொறுப்பு கூட்​ட​ணிக்கு தலைமை தாங்​கும் கட்​சிக்​குத் தான் உள்​ளது. காங்​கிரஸ்- திமுக உறவு கசந்​தது ஏன், இடது​சா​ரி​கள், 70 ஆண்​டு​களாக கூட்​ட​ணி​யில் இருந்த ஐயுஎம்​எல் ஆகியவை வெளி​யேறியது ஏன், மதி​முகவை சொந்தச் சின்​னத்​தில் போட்​டி​யிட திமுக ஏன் அனு​ம​திக்​க​வில்​லை. கமல்​ஹாசனுக்கு உரிய இடங்​களே ஒதுக்​கப்​பட​வில்​லை.

திடீரென கூட்​ட​ணிக்​குள் வந்த தேமு​தி​க​வுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. மற்ற கட்​சிகளுக்கு முன்​பை​விட தொகு​தி​கள் குறைக்​கப்​பட்​டன. இந்த இறுக்​க​மான அணுகு​முறை பற்றி ஏன் யாரும் பேசுவ​தில்​லை. அதே ​போல, திமுக தான் எங்​களை கைவிட்​டு​விட்​டது, நாங்​களாக திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேற​வில்​லை. தேர்​தல் வெற்​றி, தோல்வி​களை விட நல்​லிணக்க உறவு தான் முக்​கி​யம்.

விஜய்யை நான் ஆர்​எஸ்​எஸ் பெற்ற பிள்ளை என விமர்​சித்​தேன். அவர் ஆட்சி அமைக்க அதிமுக, பாஜக, பாமக ஆதரவை நாடா​மல் காங்​கிரஸ், இடதுசா​ரி​களை அவர் உள்​வாங்​கிக் கொண்​டார். எனவே, இனி விசிக அங்கே தான் இருக்க வேண்​டுமென முடி​வெடுத்​தோம். தவெக தலை​மையி​லான கூட்​ட​ணிக்​கு, ‘மதச்​சார்​பற்ற சமூகநீதி வெற்​றிக் கூட்​ட​ணி’ என பெயரிடப்​பட்​டது. இதி​லுள்ள ‘மதச்​சார்​பற்ற’ என்ற வார்த்​தையை இடம்​பெறச் செய்​தது நான்​தான். இந்​தக் கூட்​ட​ணிக் கொள்​கை, கோட்​பாட்​டின் அடிப்​படை​யில் உரு​வாகி இருக்​கிறது. இவ்​வாறு பேசி​னார்​.

<div class="paragraphs"><p>திருமாவளவன்</p></div>
இந்திய குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in