இந்திய குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்திய குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: இந்​தி​யர்​களுக்கு குடி​யுரிமை அட்டை வழங்​கக் கோரிய வழக்​கில் மத்​திய அரசு பதிலளிக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நெல்லையைச் சேர்ந்த முத்​து​ரா​மன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: பல்​வேறு நாடு​களி​லும் குடிமக்​களுக்கு குடி​யுரிமை அட்​டைகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்​தி​யா​விலும் ஒவ்​வொரு குடிமகன்​களுக்​கும் தனி அடை​யாள அட்டை வழங்​கப்பட வேண்​டும்.

இந்​தி​யர்​களுக்கு தனி​யான குடி​யுரிமை அட்டை இல்​லாத​தால் அவர்​கள் வெளி​நாடு​களுக்கு செல்​லும்​போது பல்​வேறு சிரமங்​களை சந்​திக்கின்றனர்.

ஆதார் தகவலின் அடிப்​படையில் குடி​யுரிமைச் சான்றிதழ் வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரப்​பட்​டிருந்​தது. மனுவை நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்வு விசா​ரித்​து, மனு தொடர்​பாக மத்​திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை நவ.5-க்கு தள்ளிவைத்​தது.

இந்திய குடியுரிமை அட்டை வழங்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in