“சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பலமானது” - திருமாவளவன்

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

Updated on
1 min read

மதுரை: சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத நல்லிணக்கத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடியிருக்கிறார்களா? தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைகள் பற்றி நாங்கள் திமுக கூட்டணியிலிருந்தாலும் எதிர்த்து பேசுகிறோம்.

பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப் பில்லை. ஓட்டுகளை பெறுவதற்காக நான் கவலைப்படப்போவதில்லை. கலங்கியதும் இல்லை. திருமாவளவன் இப்படி பேசுகி றாரே என திமுக நினைத்தால்கூட அதைப்பற்றியும் கவலைப்படவில்லை.

மொழிக்காக, இனத்துக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை தூண்டி பூரணசந்திரன் தீக்கு ளிக்க வைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல். இந்துக்களை ஏமாற்றும் செயலை வெளிப்படுத்து கிறோம். நீதித்துறை, காவல் துறை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அனைத்திலும் சங்கிகள் உள்ளனர்.

இங்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சுவாமி நாதன் வடிவத்தில் சங்கி உள்ளார். திமுக ஒரு தீய சக்தி என்று கட்சி ஆரம்பித்த தம்பி விஜய் சொல்கிறார். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ்-க்காக கட்சி தொடங்கியுள்ளீர்கள் என்பது தெரிகிறது. திமுகவை அழிக்க முடிந்தால் அழித்துக் கொள்ளுங்கள்.

அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எங்களது கொள்கையோடு ஒத்துப் போவதால்தான் திமுக வோடு இருக்கிறோம். சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்று அம்பலமாகியிருக்கிறது. இது தெரிந்தும் திமுக காரர்கள் வேண்டுமானால் வாய்மூடி இருக்கலாம், அமைதியாக இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் திமுக வையும் விமர்சிப்பவர்கள்தான். எனது தாத்தாவும், அப்பாவும் அரசியல்வாதி கிடையாது. தனியாளாக தாக்குப்பிடித்து தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |</p></div>
ஏற்றுமதியில் ஏற்றம் கண்டார் ‘மிளகாய்’ ராமர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in