திருப்பதியில் திருமாவளவன் சுவாமி தரிசனம்: தீர்த்தப் பிரசாதம், வேத ஆசி வழங்கப்பட்டது

நாடளுமன்ற நிலைக்​குழு​வினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருப்பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

நாடளுமன்ற நிலைக்​குழு​வினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருப்பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

Updated on
1 min read

திருப்​பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோவிலில் விசிக தலை​வர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்​தார். பாது​காப்​புத்​துறை தொடர்​பான நாடளுமன்ற நிலைக்​குழு​வினர் நாடு முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்த குழு​வில் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி தலை​வரும், எம்​.பி.​யு​மான திரு​மாவளவன் இடம்​பெற்று உள்​ளார். கடந்த 22ம் தேதி ஜம்​மு​ காஷ்மீரில் தொடங்​கி, பெங்​களூரு, கோவை, நீல​கிரி, சென்னை ஆகிய இடங்​களில் பாது​காப்​புத் துறை சார்ந்த அதி​காரி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அந்த குழு​வினர் நேற்று திருப்​பதி ஏழு​மலை​யான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்​டனர். திரு​மாவளவனும், நிலைக்​குழு​வினருடன் திருப்​பதி கோவிலுக்​குச் சென்று சுவாமி தரிசனம் செய்​தார்.

பின்​னர் கோவிலுக்​குள் உள்ள ரங்​க​ நாதர் மண்​டபத்​தில் தேவஸ்​தான அதிகாரி​கள் தீர்த்த பிர​சாதங்​களும், தொடர்ந்து வேத பண்​டிதர்​கள் வேத ஆசி​யும் வழங்​கினர்.

<div class="paragraphs"><p>நாடளுமன்ற நிலைக்​குழு​வினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருப்பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.</p></div>
கூடைப்பந்து சம்மேளன நிர்வாகியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நீடிப்பது தவறு: அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in