விசாரணை கைதி கொலை வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைக்க திருமாவளவன் கோரிக்கை

திருமாவளவன் | கோப்புப் படம்

திருமாவளவன் | கோப்புப் படம்

Updated on
1 min read

திருவாரூர்: ​நாகர்​கோ​விலில் விசாரணை கைதி சபரிவர்​மன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்​படுத்த வேண்​டும் என்ற பொது மக்​களின் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

திரு​வாரூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: நாகர்​கோ​விலில் விசா​ரணை கைதி சபரிவர்​மன் கொலை வழங்கை சிபிஐ விசா​ரணைக்கு உட்​படுத்த வேண்​டும் என்ற பொது​மக்​களின் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க வேண்​டும். தவெக அரசு 5 ஆண்​டு​கள் நீடிக்​கும், இது மக்​களின் கட்டளை. இந்த ஆட்சி கவிழ்​வதற்கு எந்த முகாந்​திர​மும் இல்​லை.

சேலத்​தி​லும், மதுரை​யிலும் எங்​களு​டைய போஸ்​டர்​கள் கிழிக்​கப்​பட்​டிருப்​பது போன்று தொடர்ச்​சி​யாக நடந்து கொண்​டிருக்​கிறது. நாங்​கள் யாருக்​கும் எதி​ரானவர்​கள் இல்​லை. ஆனாலும், சமூக விரோத சக்​தி​கள் சட்​டம் ஒழுங்கை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​படு​வது கவலை அளிக்​கிறது.

தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​கள் திறக்​கப்​ப​டாது என அரசு ஏற்​கெனவே முடிவு எடுத்​துள்​ளது. அதே நிலைப்​பாட்​டில் இந்த புதிய அரசும் இருக்​கும் என நான் நம்​பு​கிறேன். விரை​வில் தவெக தலை​மை​யில் ஒரு கூட்​டணி அமை​யும்.

காவிரி நீர் பிரச்​சினை தொடர்​பாக விவா​திக்க தமிழக முதல்​வர் அனைத்து கட்சி கூட்​டத்தை கூட்ட வேண்​டும். 14-க்​கும் மேற்​பட்ட பல்​கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்கள் நியமனம் செய்​யப்​ப​டா​மல் உள்​ளனர். ஏற்​கெனவே இருந்த அரசு, முதல்​வரே வேந்​த​ராக இருக்​கும் சட்​டத்தை நிறைவேற்றி அனுப்பி உள்​ளது. அந்த நிலைப்​பாட்​டில் தற்​போதைய அரசு உறு​தி​யாக இருக்க வேண்​டும். புதிய துணைவேந்​தர்​கள் நியமிக்க வேண்​டிய நடை​முறை​களை உடனடி​யாக தொடங்க வேண்​டும் என்​றார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன் | கோப்புப் படம்</p></div>
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: ஒருவர் உயிரிழப்பு; 120 பேர் மருத்துவமனையில் அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in