தேர்தலுக்குப் பிறகு அதிமுக தேய்ந்து, பாஜக வலிமை பெறும்: திருமாவளவன் விமர்சனம்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக தேய்ந்து, பாஜக வலிமை பெறும்: திருமாவளவன் விமர்சனம்
Updated on
1 min read

திருவள்ளூர்: கும்​மிடிப்​பூண்டி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக வேட்​பாளர் டி.ஜெ.கோ​விந்​த​ராஜனை ஆதரித்​து, பெரிய​பாளை​யத்​தில் விசிக தலை​வர் திரு​மாவளவன் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்​போது, அவர் பேசி​ய​தாவது: பாஜக, இஸ்​லாமியர்​களை​யும், கிறிஸ்​தவர்​களை​யும் எதிர்த்து வெறுப்பு அரசி​யலை விதைக்​கும் கட்சி. அதை அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தோளில் தூக்கி சுமக்​கிறார்.

பாஜகவை திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் எதிர்ப்பதால், திமுக​வுடன் விசிக தொடர்ந்து பயணிக்​கிறது. கொள்கை அடிப்​படை​யில்​தான் இந்த கூட்​ட​ணி. திமுக கூட்​ட​ணியி​லிருந்து விசிக வெளியே போனால், திமுக கூட்​டணி பலவீனம் அடை​யும்.

அதனால், அதி​முக, பாஜக வலு​வடை​யும். தமிழகத்​தில் ஒரு காலத்​தில் பாஜக ஒன்​றுமே இல்லை என்ற நிலை இருந்​தது. அதி​முக​வால் இப்​போது 11 சதவீதம் வாக்​குள்ள கட்​சி​யாக பாஜக மாறி​யுள்​ளது.

புதுச்​சேரி​யில் அதிமுக 10-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது கடந்த கால வரலாறு. ஆனால், இப்​போது பாஜக 10 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. அதி​முக இரு இடங்​களில் மட்​டுமே போட்​டி​யிடு​கிறது. புதுச்​சேரி​யில் அதி​முக தேய்ந்​து, பாஜக வளர்ந்​துள்​ளது.

தமிழகத்​தில் தேர்​தலுக்​குப் பிறகு அதி​முக தேய்ந்து பாஜக வலிமை பெறப்​போகிறது. எதனாலும் அதி​முக, பாஜக வலிமை பெற்​று​விடக் கூடாது என்ற காரணத்​துக்​காக, திமுக கூட்​ட​ணி​யில் விசிக நீடிக்​கிறது.

மு.க.ஸ்​டா​லின் ஆட்சி தொடர்ந்​தால், தமிழகம், தமிழர் பண்​பாடு பாது​காப்​பாக இருக்​கும்; திரு​வள்​ளுவர், பெரி​யார் பாது​காப்​பாக இருப்​பர். அதி​முக,​பாஜக வலிமை பெற்​றால் பெரி​யார் அரசி​யலை வீழ்த்​து​வார்​கள். பெரி​யார் அரசி​யல் வீழ்த்​தப்​பட்​டால் அம்​பேத்​கர் அரசி​யலை வீழ்த்​தி​ய​தாக பொருள்.

இந்த அடிப்​படை​யில்​தான் திரு​மாவளவன் திமுக கூட்​ட​ணி​யில் தொடரு​கிறான். பெரம்​பூரிலேயே விஜய் வெற்றி பெறு​வாரா என அவருக்கே சந்​தேகம் உள்​ள​தால், திருச்சி கிழக்​கில் போட்​டி​யிடு​கிறார்.

விஜய்க்கு எவ்​வளவு வாக்கு கிடைக்​கும் என்​பது நிரூபிக்​கப்​ப​டாதது. பின்​னர் எப்​படி அவர் வெற்றி பெறு​வார், ஆட்​சி​யில் பங்கு கொடுப்​பார். அது பெரிய மோசடி.இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்த நாளை முன்​னிட்​டு, பெரிய​பாளை​யம் பேருந்து நிலை​யத்​தில் உள்ள அம்​பேத்​கரின் உருவ சிலைக்கு மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன், விசிக நிர்​வாகி​யின் பெண் குழந்​தைக்கு வெற்​றிச்​செல்வி என பெயர் சூட்​டி​னார்.

பிரச்​சா​ரத்​தின் முடி​வில், திரு​மாவளவனுக்கு கட்சி நிர்​வாகி​கள்​ ராட்​சத கிரேன்​ மூலம்​ பிரம்​மாண்​ட மாலை​ அணி​வித்​து, பூக்​களை தூவினர்​.

தேர்தலுக்குப் பிறகு அதிமுக தேய்ந்து, பாஜக வலிமை பெறும்: திருமாவளவன் விமர்சனம்
மீன்பிடி தடைக்காலம் இன்றுமுதல் அமல்: 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in