மீன்பிடி தடைக்காலம் இன்றுமுதல் அமல்: 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தின் கழுகுப்பார்வை காட்சி.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தின் கழுகுப்பார்வை காட்சி.

Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகத்தில் 2 மாத கால மீன்பிடித் தடைக்​காலம் இன்று (புதன்​கிழமை) முதல் அமலுக்கு வரு​வ​தால் 15 ஆயிரம் விசைப்​படகு​கள் கடலுக்​குச் செல்​லாது.

தமிழகத்​தின் வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்​றும் பாக் நீரிணை கடல் பகு​தி​களில் ஏப்​ரல், மே, ஜுன் மாதங்​களை மீன் உள்​ளிட்ட கடல்​வாழ் உயி​ரிகளின் இனப்​ பெருக்க கால​மாக, மத்​திய மீன்​வளத்​துறை அமைச்​சகம் கண்​டறிந்​துள்​ளது.

மீன் வளத்தை பெருக்​கும் நோக்​கில் இந்தக் காலகட்​டத்​தில் விசைப்​படகு​கள் மற்​றும் இழு​வைப் படகு​கள் மூலம் மீன்​பிடிக்​கத் தடை விதிக்​கப்​படு​கிறது.

அதன்​படி தமிழகத்​தில் இந்த ஆண்​டுக்​கான 61 நாள் மீன்​பிடித் தடைக்​காலம் இன்று (புதன்​கிழமை) முதல் அமலுக்கு வரு​கிறது. இந்த தடை ஜுன் 14 வரை 61 நாட்​களுக்கு அமலில் இருக்கும்.

இந்த தடைக்​காலத்​தில் தமிழக அளவில் கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், நாகப்பட்​டினம், மயி​லாடு​துறை, திரு​வாரூர், கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்ளுர், சென்னைஉள்​ளிட்ட 14 மாவட்​டங்​களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசைப் ​படகு​கள் மற்​றும் இழு​வைப் படகு​களும் கடலுக்குச் செல்​லாமல், மீன்​பிடித் துறை​முகத்​தில் நிறுத்தி நங்கூர மிடப்​பட்​டிருக்​கும்.

இந்த இரண்டு மாதங்​களில் மீனவர்​கள் தங்​கள் படகு​களை சீரமைக்​கப் பயன்​படுத்​திக் கொள்வார்கள். மீன்​பிடித் தடைக்​காலம் அமலுக்கு வந்​தவுடன் தமிழகத்​தில் மீன்​களின் விலை​யும் உயரத் தொடங்​கும்.

அதே சமயம், பாரம்​பரிய மீன்​பிடி படகு​களான பாய்​மரப் படகு, நாட்​டுப் படகு மற்​றும் கட்​டு மரங்​கள் வழக்​கம் போல கடலுக்​குச் செல்​லும்.

இதுகுறித்​து, ராமேசுவரம் மீனவர்​கள் கூறும்போது, மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இலங்கை சிறை​களில் 6 மாதம் முதல் 2 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்ட 70-க்​கும் மேற்​பட்ட தமிழக மீனவர்​கள் தண்​டனைக் கைதி​களாக உள்​ளனர்.

மேலும் சிலர் அதி​கள​வில் அபராதத் தொகை விதிக்​கப்​பட்டு கைதி​களாக உள்​ளனர். இந்த மீனவர்​களை விடு​தலை செய்ய மத்​திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனக் கூறினர்.

<div class="paragraphs"><p>ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தின் கழுகுப்பார்வை காட்சி.</p></div>
சாத்தூர் திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகை திருட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in