‘அமைச்சரவையில் இருந்து விசிகவை வெளியேற்ற முயற்சி’ - திருமாவளவன் குற்றச்சாட்டு

 திருமாவளவன்

திருமாவளவன்

Updated on: 
1 min read

சென்னை: ‘இடைத்தேர்தல் வெற்றிக்கு பாமக தான் காரணம் என கூறுவது அமைச்சரவையில் இருந்து விசிகவை வெளியேற்ற கட்டமைக்கப்படும் கதை’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இரண்டு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் விசிகவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மனசாட்சியுள்ள அனைவரும் அறிவர். ஆனால் இதுகுறித்து விவாதிப்பவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விசிகவின் முக்கியத்துவத்தை மறைக்க முயற்சிக்கின்றனர்.

முதலிடத்தில் இருந்த அதிமுக 3-வது இடத்துக்கு சென்றுள்ளது. அதைக் குறித்துகூட பேசாதவர்கள், தவெக வெற்றிக்கு விசிக காரணம் இல்லை; பாமக தான் காரணம் என்ற கதையை கட்டமைக்கின்றனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது விசிகவை தவெக கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பது தான். திமுக கூட்டணியில் இருந்த போதும் இதே முயற்சிகளை செய்தனர். அதையே தற்போதும் கையாளுகின்றனர். அதிமுகவின் வாக்குகள் எப்படி திமுகவுக்கு வராதோ அதேபோல விசிக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு பாமகவின் வாக்குகள் கிடைக்காது.

தவெகவுக்கு பாமக ஆதரவு அளிக்க போகிறது; தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற போகிறது என பரப்பினர். இப்படி ஒரு ஆசையை தூண்டுவதன் மூலம் பாமகவின் வாக்குகள் திமுகவுக்குச் செல்லாமல் கணிசமான வாக்குகள் தவெகவுக்கு செல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், விசிகவினரை சோர்வடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பரப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p> திருமாவளவன்</p></div>
‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in