“தனது அரசியல் எதிர்காலத்தை விஜய் சூனியமாக்கி கொள்ள மாட்டார்” - திருமாவளவன் கரிசனம்

திருமாவளவன் | கோப்புப் படம்

திருமாவளவன் | கோப்புப் படம்

Updated on
1 min read

தே.ஜ. கூட்​ட​ணி​யில் சேர விஜய் இணங்க மாட்​டார். தனது அரசி​யல் எதிர்​காலத்தை சூனிய​மாக்​கிக் கொள்ள மாட்​டார் என்று திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, விஜய்யை தங்​கள் கூட்​ட​ணி​யில் இணைக்க முயற்​சிப்​ப​தாக செய்​தி​கள் வரு​கின்​றன. விஜய்க்கு அழுத்​தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்​சிகள் நடப்​ப​தாக செய்​தி​கள் வரு​கின்றன. நண்​பர் விஜய் பாஜக​வுக்கு அடிபணிந்​தால் அவருடைய அரசி​யல் எதிர்​காலம் சூனிய​மாகி​விடும்.

அது அவருக்​கும் தெரி​யும், பிற மாநிலங்​களில் பாஜக, சங் பரி​வார் நயவஞ்​சக​மாக கூட்​டணி கட்​சிகளை வளைப்​பது, போன்ற யுக்​தியை கையாள்​வர். அதை தமி​ழ​கத்​தி​லும் செய்ய பார்க்​கின்​ற​னர். நண்​பர் விஜய் அதற்கு இணங்க மாட்​டார். தனது எதிர்​காலத்தை சூனிய​மாக்கி கொள்ள மாட்​டார் என நான் நம்​பு​கிறேன்.

இடது​சா​ரி​கள் கூடு​தல் தொகு​திகள் கேட்​ப​தாக கூறுகிறீர்​கள், கூட்​டணி பேச்​சு​வார்த்​தை​யின்​போது கூட்​டணி கட்​சிகள் இடையே மாறு​பட்ட, முரண்​பட்ட கருத்​துகள் வரு​வது இயல்​பு​தான். ஆனாலும் இறு​தி​யில் சுமூக தீர்வு காண்​போம். இந்த கருத்​துக்​களால் கூட்​ட​ணி​யில் எந்த பாதிப்​பும் ஏற்​ப​டாது. விடு​தலை சிறுத்​தைகள் கட்சி எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடும் என இரண்​டொரு நாளில் தெரிந்து விடும்.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>திருமாவளவன் | கோப்புப் படம்</p></div>
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in