காசி தமிழ்ச் சங்கமம் திருக்குறள் போட்டிகள்

Updated on: 
1 min read

சென்னை: காசி தமிழ்ச் சங்​கமம் 5.0 திட்​டத்​தின் ​கீழ் நடத்​தப்​படும் திருக்​குறள் போட்​டிகளில் மாணவர்​கள் பங்​கேற்க யுஜிசி அழைப்பு விடுத்துள்​ளது.

இது​குறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) வெளி​யிட்ட அறி​விப்பு: தமிழகத்துக்​கும், காசிக்​கும் இடையேயான நீண்​டகால நாகரீக பிணைப்​பு​களை கொண்​டாடும் வகை​யில், மத்​திய கல்வி அமைச்​சகம் சார்​பில், காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி2022 முதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு காசி தமிழ்ச் சங்​கமம் 5.0 நிகழ்ச்சி நவ.28 முதல் டிச.12 வரை நடை​பெறவுள்​ளது. இந்தஆண்டு ‘திருக்​குறள் கற்​போம்’ என்ற நிகழ்ச்சி நடத்​தப்​பட​வுள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள மாணவர்​களுக்கு திருக்​குறளின் ஆழமான கருத்​துகளை ஊக்​கு​விக்​கும் நோக்​கத்​துடன் மாணவர்​களுக்கு திருக்​குறள் போட்​டிகள் நடத்​தப்​பட உள்​ளன. இதில் வெற்றி பெறும் 1,000 மாணவர்​கள் காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சிக்குஅழைத்​துச் செல்​லப்​பட உள்​ளனர்.இந்த போட்​டி​யில் மாணவர்​கள் பங்​கேற்க பல்​கலைக்​கழகங்​கள் ஊக்​கு​விக்க வேண்​டும். கூடுதல் விவரங்​களை www.kts.cict.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

காசி தமிழ்ச் சங்கமம் திருக்குறள் போட்டிகள்
தமிழக அரசு நிதி ரூ.22 கோடியை மோசடி செய்த 7 பேர் கைது: 24 வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது அம்பலம்

X