தமிழக அரசு நிதி ரூ.22 கோடியை மோசடி செய்த 7 பேர் கைது: 24 வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது அம்பலம்

செல்லப்பாண்டி, கண்ணதாசன், அஷ்ரஃப் அலி, ஜெகதீஷ்

செல்லப்பாண்டி, கண்ணதாசன், அஷ்ரஃப் அலி, ஜெகதீஷ்

Updated on: 
2 min read

சென்னை: தமிழக அரசின் ரூ.22.35 கோடி நிதிமோசடி வழக்​கில் 7 பேர் கைதுசெய்​யப்​பட்ட நிலை​யில், மோசடிப் பணம் 24 வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டது அம்​பலமாகி​யுள்​ளது.

தமிழக அரசின் 15-வது நிதிக் குழு​வின் சுகாதா​ரத் துறை மானியநிதி, கிராமப்​புறங்​களில் ஆரம்ப சுகாதா​ரக் கட்​டமைப்​பு​களை மேம்​படுத்​து​வதற்​காக ஒதுக்​கப்பட்டு வரு​கிறது. இந்த நிதி சென்னை நந்​தனம் சிஐடி நகரில் உள்ள ஹெச்​டிஎப்சி வங்​கிக் கிளை​யில், ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை இயக்​குநர் பெயரில் தனி வங்​கிக் கணக்​கில் பராமரிக்​கப்​பட்டு வந்​தது. இந்​தக் கணக்​கில் இருந்து நிதி​யைப் பெறவும், ஒப்​பந்​ததா​ரர்​களுக்​குப் பணம் வழங்​கவும் உரிய அனுமதி பெற்ற வட்​டார வளர்ச்சி அலு​வலர்​களுக்​குத் தனித்​தனியாக பயனர் பெயர் மற்​றும் கட​வுச்​சொற்​கள் வழங்​கப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில், கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையி​லான கால கட்​டத்​தில் மர்ம நபர்​கள் வங்​கிக் கணக்​கில் இருந்து, ரூ.22.35 கோடியை பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றினர். இது​குறித்து ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை இயக்​குநரக கண்​காணிப்பாளர் ராம்​பிரசாத், சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மத்​திய குற்​றப்​பி​ரிவு சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

இதில், வங்​கி​யின் எஸ்என்ஏ எனப்​படும் ஒற்​றைக் கணக்கு நிர்​வாகத்​துக்​காகப் பயன்​படுத்​தப்​பட்ட இணை​யதளத்​தின் வாயிலாக இந்த மோசடி நடை​பெற்​றது தெரியவந்​தது. குறிப்​பாக, ‘Squareuplive.com/rdprd’ என்ற இணை​யதளம் மூலம், பல்​வேறு மின்​னஞ்​சல் முகவரி​களு​டன் இணைக்​கப்​பட்ட வங்​கிக் கணக்​கு​களுக்​குப் பணம் மாற்றப்பட்டது கண்​டறியப்​பட்​டது.

மேலும், நாகை கீழையூர், ராம​நாத​புரம் மண்​டபம், திருப்பூர் தாராபுரம் வட்​டார வளர்ச்சி அலு​வல​கங்​களின் பெயர்​களில் இருந்த பயனர் அடை​யாளங்​களைப் பயன்​படுத்தி மோசடிநடை​பெற்​றிருப்​ப​தும் தெரியவந்​தது. இதன்படி, மொத்​தம் 46 பரிவர்த்​தனைகள் மூலம் ரூ.22 கோடியே 30 லட்​சத்து 4,879 பல்​வேறு நிறு​வனங்​கள் மற்​றும் தனிநபர்​ வங்​கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

இதில் சம்​வியத் மார்க்​கெட்​டிங், கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்​டோர், பாரத் கிரைன், நெக்ஸ்வோரா காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு​வன வங்​கிக் கணக்​கு​களுக்​குப் பணம் சென்​றுள்​ளது. இதையடுத்து, சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலைச் சேர்ந்த செல்​லப்​பாண்​டியன், திரு​வல்​லிக்கேணி கரும்​பூர் அண்ணாதுரை ஆகியோ​ரும் இவர்களுக்கு உடந்​தையாக இருந்த பெங்​களூரு லோகநாதனும் சிறை​யில் அடைக்​கப்​பட்டனர்.

மேலும், இச்​சம்​பவத்​தில் தொடர்​புடைய மதுரையைச் சேர்ந்த அப்துல்ரஹ்​மான், ஜெகதீஷ், சிவகங்கை அஷ்ரஃப் அலி, கண்​ணதாசன் ஆகியோரை​யும் கைது செய்து போலீஸார் விசாரிக்​கின்​றனர். கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் இருந்து 7 செல்​போன், 14 சிம் கார்டுகள், வங்கி காசோசலை புத்​தகம் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

<div class="paragraphs"><p>அப்துல் ரஹ்மான், லோகநாதன், அண்ணாதுரை</p></div>

அப்துல் ரஹ்மான், லோகநாதன், அண்ணாதுரை

போலீ​ஸாரின் விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் சைபர் மோசடி கும்​பலிடம் இருந்து கமிஷன் பெற்​றுக் கொண்டு தங்களது வங்​கிக்

கணக்​கு​களைப் பணப் பரிமாற்​றத்​துக்​குப் பயன்​படுத்த அனுமதித்​திருப்​பது தெரிய வந்​துள்​ளது. மேலும், இவர்​களின் வங்​கிக் கணக்​கு​கள்வாயி​லாக 24 வெவ்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்​குப் பரிமாற்​றம் செய்​யப்​பட்​டிருப்​ப​தும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து, மோசடிப் பணம் சென்ற வங்​கிக் கணக்​கு​களின் உரிமையாளர்​களைக் கண்​டறிந்து அவர்​களைக் கைது செய்​யும் நட​வடிக்​கை​யில் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். மேலும், தமிழக அரசின் வங்​கிக்கணக்​கில் இருந்து கோடிக்​கணக்​கான ரூபாயை நூதன முறை​யில் திருடிய கும்​பலின் மூளை​யாகச் செயல்​பட்​ட​வர்​கள் யார், இந்த மோசடிக்​குப் பின்​னணி​யில் வேறு யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது என்​பது குறித்​தும் மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் விசாரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>செல்லப்பாண்டி, கண்ணதாசன், அஷ்ரஃப் அலி, ஜெகதீஷ்</p></div>
ஜெம் வீரமணி வீட்டில் சிறுமிகள் உடல் புதைக்கப்பட்டதா? - பொக்லைன் மூலம் தோண்டி போலீஸார் விசாரணை

X