ஒரு முறை ஜெயித்தால் மறுமுறை தோல்வி! - நயினார் சாத்தூருக்கு மாறுவதன் காரணம் இதுதானா?

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இந்த முறை நெல்​லையை விட்டு சாத்​தூருக்கு ஜாகை மாறப் போகி​றார் என்று ஆரம்​பம் முதலே செய்​தி​கள் அடிபட்டு வந்த நிலை​யில், தற்​போது அது ஊர்​ஜித​மாகி இருக்​கிறது. பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​கள் பட்​டியலில் நெல்​லைக்​குப் பதிலாக சாத்​தூர் இடம்​பிடித்​திருப்​பதே அதற்கு சாட்​சி.

2001 சட்​டபேர​வைத் தேர்​தல் முதல் தொடர்ச்​சி​யாக நெல்லை தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வரு​கி​றார் ராதாபுரம் தொகு​தி​யைச் சேர்ந்த நயி​னார் நாகேந்​திரன். ஆனால், ஒரு தேர்​தலில் ஜெயித்​தால் அடுத்த தேர்​தலில் தோல்வி என்​பது தான் நயி​னாரின் தேர்​தல் பயோ டேட்​டா​வாக இருக்​கிறது. 1962-க்கு பிறகு நெல்லை தொகு​தி​யில் ஒரு முறை ஜெயித்த யாரும் அடுத்த தேர்​தலில் ஜெயித்​த​தாக சரித்​திரம் இல்​லை. இது நயி​னாருக்​கும் அப்​படியே பொருந்தி வரு​வ​தாலேயே இம்​முறை தொகுதி மாறி அவர் சாத்​தூரில் களமிறங்​கு​வ​தாக சென்​டிமென்ட் செய்தி சொல்​கி​றார்​கள் நெல்லை பாஜக வட்​டாரத்​தில்.

“திருநெல்​வேலி​யில் மீண்​டும் போட்​டி​யிடு​வீர்​களா?” என்று செய்​தி​யாளர்​கள் கேட்ட போதெல்​லாம் மழுப்​பலாகவே பதில் சொல்லி வந்த நயி​னார் நாகேந்​திரன், சாத்​தூர் தொகு​தி​யில் கணிச​மாக இருக்​கும் முக்​குலத்​தோர் வாக்கு வங்​கியை குறி​வைத்​தும் அங்கு இடம்​பெயர்​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

தொகுதி மாறப் போவதை வெளிப்​படை​யாகச் சொல்​லா​விட்​டாலும் கடந்த 6 மாத கால​மாகவே சாத்​தூர் தொகு​தி​யில் வீடு​பிடித்து குடியேறும் வேலை​களை ஓசைப்​ப​டா​மல் செய்து வந்​தார் நயி​னார்.

அத்​துடன், அவரது மகன் நயி​னார் பாலாஜி, சாத்​தூர் தொகு​தி​யில் நிகழ்ச்​சிகளை நடத்​து​வ​தி​லும், முக்​குலத்​தோர் அமைப்​பு​களை ‘கவனிப்​ப​தி​லும்’ அக்​கறை காட்​டி​னார். இதை வைத்​து, நயி​னார் நெல்​லை​யிலும் பாலாஜி சாத்​தூரிலும் களமிறங்​கப் போவ​தாகக் கூட செய்​தி​கள் கசிந்​தன. அதேசம​யம், மாநில பாஜக துணைத் தலை​வ​ரும் தனது நண்​பரு​மான கோபால்​சாமிக்கு ராஜ​பாளை​யம் தொகு​தி​யைப் பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்​திருந்​தார் நயி​னார் நாகேந்​திரன்.

இதை நம்​பி, கோபால்​சாமி வாக்​குச் சேகரிப்​பிலும் ஈடு​பட்​டிருந்​தார். இந்த நிலை​யில், ஒரே (விருதுநகர்) மாவட்​டத்​தில் இரண்டு தொகு​தி​களை பாஜக-வுக்கு கேட்​க​முடி​யாது என்​ப​தால் சாத்​தூரை மட்​டும் சாதுர்​ய​மாக பெற்​றுக் கொண்டு நண்​பருக்கு எப்​படியோ சமா​தானம் சொல்லி இருக்​கிறார் நயி​னார்​.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்ற விஜய்: பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in