அதிமுகவில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமியிடம் கோரிக்கை

| படம்: எல்.சீனிவாசன் |

| படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் அதிமுக வலுப்​பெற கட்​சி​யில் டிடிவி தினகரனை சேர்க்க வேண்​டும் என்று தஞ்​சாவூர் மாவட்ட நிர்​வாகி​கள் பழனி​சாமி​யிடம் நேற்று கோரிக்கை வைத்​துள்​ளனர்.

அதி​முக சார்​பில், நடந்து முடிந்த சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் முடிவு​கள் குறித்​தும், கட்​சி​யின் ஆக்​கப்​பூர்​வ​மான வளர்ச்​சிப் பணி​கள் குறித்​தும் தஞ்​சாவூர், சிவகங்கை மாவட்​டங்​களைச் சேர்ந்த கட்​சி​ நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் பேசிய நிர்​வாகி​கள், “அரசி​யலில் தற்​போது தவெகவை எதிர்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. இது​போன்ற சூழலில் டெல்டா மாவட்​டங்​களில் அதி​முகவை வலுப்​படுத்த, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை கட்​சி​யில் சேர்க்க வேண்​டும்.

இதன்​மூலம், அடுத்து வரும் தேர்​தல்​களை முழு பலத்​துடன் அதி​முக​வால் எதிர்​கொள்ள முடி​யும். இது​தான் டெல்டா மாவட்​டங்​களில் உள்ள கட்​சித் தொண்​டர்​கள் மற்​றும் பொது​மக்​களின் விருப்​ப​மாக உள்​ளது” என்​றனர்.

இதற்கு பதில் அளித்த பழனி​சாமி, “டிடிவி தினகரன் ஒரு கட்​சியை நடத்தி வரு​கிறார். அவரை எப்​படி அழைப்​பது?” என பதில் அளித்​துள்​ளார். வழக்​க​மாக கூட்​டத்​தில் தினகரன், சசிகலா, ஓ.பன்​னீர்​செல்​வம் குறித்து பேசி​னாலே, பழனி​சாமி குறுக்​கிட்​டு, அது முடிந்​து​போன விஷ​யம், கட்​சி​யின் வளர்ச்சி குறித்து பேசுங்​கள் என கூறு​வார்.

ஆனால் இப்​போது, ஒவ்​வொரு நிர்​வாகி​யின் கருத்​தை​யும் கவன​மாக கேட்​டு, பரிசீலித்து வரு​கிறார் என கூட்​டத்​தில் பங்​கேற்ற நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். அதன்​பிறகு கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் கடந்த தேர்​தலில் ஒரு​வர் கூட வெற்றி பெற​வில்​லை. நிர்​வாகி​கள் அனை​வரும் கடுமை​யாக உழைக்க வேண்​டும்.

தவெக​வின் வெற்​றி, சுனாமி அலை​போல திடீரென வந்த வெற்​றி. வரும் காலங்​களில் அதி​முக மக்​களின் ஆதர​வைப் பெறும். அதி​முக​வின் சாதனை​களை ஒவ்​வொரு நிர்​வாகி​யும் மக்​களைச் சந்​தித்து கூற வேண்​டும்.

உள்​ளாட்​சித் தேர்​தலில் தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் அனைத்​தி​லும் அதி​முக வெற்​றி​பெற வேண்​டும். அதை இலக்​காகக் கொண்டு தீவிர கட்​சிப் பணி​யாற்​றுங்​கள் என்று கூறி​னார். இக்​கூட்​டத்​தில் கட்​சி​யின் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணை பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனி​வாசன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

<div class="paragraphs"><p>| படம்: எல்.சீனிவாசன் |</p></div>
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in