தமிழக பொருளாதாரம் 16 சதவீத வளர்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

தமிழக பொருளாதாரம் 16 சதவீத வளர்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: அரசின் தீவிர முயற்​சி​யால் தமிழகத்​தின் பொருளா​தா​ரம், கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் 31.19 லட்​சம் கோடிகளாக உயர்ந்து 16 சதவீத வளர்ச்​சியை எட்​டி​யுள்​ள​தாக நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: புதிய தொழில் கொள்​கைகளால் வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் அமெரிக்க பொருளா​தா​ரத்தை நாம் எட்​டு​வோம் என்ற இலக்​குடன் செயல்​படும், முதல்​வரின் முன்​னெடுப்​பு​களால் தமிழகத்​தில் பொருளா​தார வளர்ச்சி சிறப்பான உச்​சத்​தை தொட்​டுள்​ளது.

எனவே, மாநில ஒட்​டுமொத்த உற்​பத்தி மதிப்பு (GSDP) 2023-24-ம் ஆண்​டு​களில் 26.88 லட்சம் கோடி​யாக இருந்த தமிழக பொருளா​தா​ரம், கடந்த ஆண்டு 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.31.19 லட்​சம் கோடியாக உயர்ந்து 16 சதவீத வளர்ச்​சியை நாம் இன்று எட்​டி​யுள்​ளோம். இது அரசின் சிறப்​பான கொள்​கைகளுக்கு கிடைத்த வெற்​றி​யாகும். இந்த உயர் வளர்ச்சி விகிதம் என்​பது கடந்த 3 ஆண்​டு​களாகவே தொடர்ந்து இருக்கிறது. 2021-22-ல் 15.91 சதவீதம், 2022-23-ல் 14.47 சதவீதம், 2023-24-ல் 13.34 சதவீத​மாக இருந்​தது.

முதல்​வர் ஸ்டா​லின் ஆட்சி பொறுப்​பேற்ற பின் இந்த வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. இன்று அது 16 சதவீதத்தை தொட்​டிருப்பது திமுக ஆட்​சி​யின் வெற்​றிக்கு எடுத்​துக்​காட்​டு.

இதில், உற்​பத்​தித்​ துறை பெரும் பங்​களிப்பை செய்​துள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில் உள்ள 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிற்​சாலைகளில், 27.7 லட்​சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சியில் கட்​டுமானம் அதிகள​வில் உதவி செய்​துள்​ளது. சேவைத்துறை​ 53 சதவீதம் பங்களித்​துள்​ளது.

குறிப்​பாக, ஒரு ட்ரில்​லியன் பொருளா​தா​ரத்தை நாம் எட்ட ஏற்​றும​தி​யில் முன்​னேற வேண்​டும். அதேபோல் பல்​வேறு புரிந்​துணர்வு ஒப்​பந்தங்​கள் மற்றும் முதலீட்டாளர் சந்​திப்​பின் மூல​மும் ரூ.11 லட்​சத்து 40,731 கோடிக்கு முதலீடு​கள் பெறப்​பட்டு 1,016 புரிந்துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளன. இதனால், 34.08 லட்​சம் பேருக்கு நேரடி, மறைமுக வேலை​ கிடைத்​துள்ளது.

தமிழகத்​தின் ஏற்​றுமதி 2024-25-ல் 14.65 பில்​லியன் டால​ராக உயர்ந்​துள்​ளது. மின்​னணு பொருட்​கள் ஏற்​றும​தி​யில் தமிழகம் பெரிய அளவில் முன்​னேறி​யுள்​ளது. அதே​போல், உயர்​

கல்​வி​யில் இந்​திய சராசரி 28.4 சதவீத​மாக உள்​ள​போது தமிழகம் 47 சதவீத​மாக இருக்​கிறது. நிதிப்​பற்​றாக்​குறை 3 சதவீதத்​துக்குள்​ளாக 2025-26-ல் கட்​டுப்​படுத்​தப்​படும். தமிழகத்​தின் நிதி மேலாண்​மை, மொத்த வளர்ச்​சி,தொழில் வளர்ச்​சி, சமூக வளர்ச்​சிக்​கும் தி​ரா​விட மாடல் ஆட்​சிக்​கும் கிடைத்​துள்ள நற்​சான்று தான் இந்த 16 சதவீத வளர்ச்​சி​யாகும்​. இவ்​வாறு கூறினார்​.

தமிழக பொருளாதாரம் 16 சதவீத வளர்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
காலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வோம்: தமிழகம் போராடி வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in