காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
Updated on
1 min read

சிவகாசி: ​காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாட்​டால் நாடு நெருக்​கடி நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது என மத்​திய அரசு மீது நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு குற்​றம்​சாட்​டி​னார்.

மத்​திய அரசைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி சார்​பில் விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி பேருந்து நிலை​யம் அருகே ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாநகர் திமுக செயலா​ளர் உதயசூரியன் தலைமை வகித்​தார்.

ஆர்ப்​பாட்​டத்​தைத் தொடங்​கி ​வைத்து நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு பேசி​ய​தாவது: தற்போது ஏற்பட்டுள்ள காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாட்​டால் நாடு நெருக்​கடி நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளது.

சிலிண்டர் பிரச்​சினையைத் தீர்க்க வேண்​டிய பொறுப்பை மத்தியில் உள்ள மோடி அரசு தட்​டிக் கழிக்​கிறது. வளை​குடா நாடு​களில் தொடர்ந்து பதற்​றம் நில​வு​கிறது.

வரு​முன் காப்​போம் என்ற அடிப்​படை​யில், பாஜக அரசு செயல்​பட்​டிருந்​தால் இன்று இந்த நிலை ஏற்​பட்​டிருக்​காது. கடந்த காலங்களில் ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யில் ரூ.417 ஆக இருந்த சிலிண்டர் விலை, தற்​போது ஆயிரம் ரூபாயை நெருக்கி உயர்ந்​துள்​ளது.

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா போட்​டதைவிட பெரிய குண்டை மத்திய பாஜக அரசு நாட்டு மக்​கள் மீது போட்​டுள்​ளது. அமெரிக்கா​வுக்கு அடிமை​யாக ரஷ்​யா​விடம் இருந்து வாங்​கிய கச்சா எண்​ணெய்யை வாங்க மறுத்​தது​தான் பிரச்​சினைக்கு காரணம்.

பாஜக நாட்​டின் இறை​யாண்​மை​யைக் காக்க, அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு அடிபணி​யாமல் இருந்​திருந்​தால் இந்த நிலைமை ஏற்​பட்டு இருக்​காது. உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன, பெட்​ரோல் பங்க்​கில் மக்​கள் கேன்​களு​டன் வரிசை​யில் நிற்​கின்​றனர், வீடு​களுக்கு 45 நாட்​களுக்​குப் பின்​னர்​தான் சிலிண்​டரை பதிவு செய்​வோம் எனக் கூறுகின்​றனர்.

ஆனால், தட்​டுப்​பாடு இல்​லை. நானே காஸ் ஏஜென்சி வைத்​திருக்​கிறேன் எனக் கூறி பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தனது ஏஜென்​ஸிக்கு விளம்​பரம் தேடிக் கொண்​டிருக்​கிறார். கப்​பல் வரு​கிறது என்​கிறார்​கள். ஆனால், எரி​வாயு வரவில்​லை.

அனைத்து வீடு​களுக்​கும் குடிநீர், அனை​வருக்​கும் கல்​வி, நூறு நாள் வேலை என அனைத்​துத் திட்​டங்​களுக்கான நிதி​யை​யும் நிறுத்திவிட்​டு, தமிழ்​நாட்​டை​யும், மக்​களை​யும் தொடர்ந்து வஞ்​சிக்​கும் அரசாக மத்​திய அரசு உள்​ளது.

திரா​விட மாடல் 2.0 ஆட்சி தொடர்​வது உறு​தி. இவ்​வாறு அமைச்சர் பேசி​னார். ஆர்ப்​பாட்​டத்​தில் எம்​எல்ஏ அசோகன், மேயர் சங்​கீ​தா, முன்​னாள் எம்​எல்ஏ கங்​காதரன், தி​முக வர்த்தக அணி துணைத் தலை​வர்​ வனராஜ் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
பெண் போலீஸுக்கு பாலியல் துன்புறுத்தல்: கோவை சிறப்பு காவல்படை கமாண்டன்ட் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in