“திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்டும்” - செல்வப்பெருந்தகையிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

“திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்டும்” - செல்வப்பெருந்தகையிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
Updated on
2 min read

அதி​காரத்​தில் பங்கு கேட்​கும் விவ​காரத்​தில் திமுக - காங்கிரஸ் இடையி​லான வார்த்​தைப் போர் முற்றி வரும் நிலை​யில், நேற்று காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை​யைச் சந்​தித்​துப் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்​சி​யின் தலை​வர் மு.தமி​முன் அன்​சா​ரி, “சமூக வலை​தளங்​களில் பரவும் கருத்​துகள் மக்​களிடம் அவநம்​பிக்​கையை ஏற்​படுத்​தி​விடக் கூடாது, திமுக கூட்​டணி சிந்​தாமல், சிதறாமல் வெற்றி பெற வேண்​டும்” என வலி​யுறுத்​தி​னார்.

திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள காங்​கிரஸ் கட்​சிக்​குள் எழுப்​பப்​படும் ‘ஆட்​சி​யில் பங்​கு’ குரல்​கள் கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளன. தமி​ழ​கத்​தில் அதி​காரப் பகிர்வு குறித்து பேசுவதற்​கான சூழல் வந்​து​விட்​ட​தாக விருதுநகர் காங்​கிரஸ் எம்​பி-​யான மாணிக்​கம் தாகூர் தெரி​வித்த கருத்​தும் வாதப் பிர​தி​வாதங்​களை எழுப்​பிக் கொண்டே இருக்​கிறது.

இந்​நிலை​யில் இந்​தப் பிரச்​சினையை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்​சி​யின் தலை​வர் தமி​முன் அன்​சா​ரி, மவுண்ட் ரோடு தர்கா அறங்​காவலர் மன்​சூர் அலி, ‘ஷி​யா-சன்னி ஒற்​றுமை கூட்​டமைப்​பு’ தலை​வர் சையத் முஜிபுர் ரஹ்​மான் ஆகி​யோர் நேற்று சத்​திய மூர்த்தி பவனில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப் பெருந்​தகையை சந்​தித்​துப் பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்த தமி​முன் அன்​சா​ரி, “இந்த சந்​திப்பு மரி​யாதை நிமித்​த​மானது. சமூக வலை​தளங்​களில் ஆளாளுக்கு எதை​யா​வது ஒன்றை எழுதுகி​றார்​கள். இப்​படிப்​பட்ட கருத்​துகள் மக்​களிடம் அவநம்​பிக்​கையை ஏற்​படுத்​தி​விடக் கூடாது என்ற கவலை எங்​களுக்கு இருக்​கிறது. ஒவ்​வொரு கட்​சிக்​கும் தேர்​தல் ரீதி​யாக, அரசி​யல் ரீதி​யாக ஒவ்​வொரு எண்​ணம் இருக்​கும். ஒவ்​வொரு கொள்கை இருக்​கும். அது அவர்​களு​டைய உள் விவ​காரம். ஆட்​சி​யில் பங்கு பற்றி எந்​தக் கருத்​தை​யும் என்​னால் கூற முடி​யாது. அதற்​காக இந்த சந்​திப்பு நடை​பெற​வில்​லை.

சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக தலை​மையி​லான இண்​டியா கூட்​ட​ணியை வலிமைப்​படுத்த வேண்​டியது அவசி​யம். எங்​களை பொறுத்​தவரை சர்ச்​சைகள் இல்​லாமல் இந்த கூட்​டணி அடுத்​தடுத்த நகர்​வு​களுக்​குச் செல்​ல​வேண்​டும். எந்த ஒரு சச்​சர​வும், எதிரி​களுக்கு மகிழ்ச்சி ஏற்​படுத்​தக்​கூடிய வகை​யில் அமைந்​து​விடக் கூடாது. தமிழக மக்​களின் நம்​பிக்​கையை காப்​பாற்​றும் வகை​யில், கூட்​டணி கட்​சிகள் ஒன்​றாக இணைந்து பணி​யாற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்தி செல்​வப்​பெருந்​தகை​யிடம் கோரிக்கை வைத்​துள்​ளேன். இந்​தக் கூட்​டணி சிந்​தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்​டும் என்​பதே மக்​களின் எதிர்​பார்ப்​பு” என்​றார்.

இது குறித்து செல்​வப்​பெருந்​தகை கூறுகை​யில், “தமி​முன் அன்​சாரி ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச வரவில்​லை. கூட்​ட​ணியை பலப்​படுத்​தவே வலி​யுறுத்​தி​னார். இதை வைத்து ஆர்​எஸ்​எஸ் - பாஜக கட்​சிகளுக்கு பேசுவதற்கு இடம் கொடுத்​து​விடக் கூடாது என்று வேண்​டு​கோள் விடுத்​தார். அதி​காரப் பகிர்வு குறித்து மாணிக்​கம் தாகூர் பேசி​யது அவரது தனிப்​பட்ட கருத்​து.

சமீபத்​தில் கூட காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர், ‘நாங்​கள் வேறு எந்​தக் கட்​சி​யுட​னும் கூட்​டணி பேச​வில்​லை. திமுக-வுடன் மட்​டும் தான் கூட்​டணி பேசிக்​கொண்​டிருக்​கி​றோம். எந்​தக் கட்​சி​யால் தான் அதி​காரம் இல்​லாமல் இருக்க முடி​யும்​... கொடுத்​தால் வேண்​டாம் என்​றா சொல்​வார்​கள்?’ என்று தான் தெரி​வித்​தார்.

எது​வாக இருந்​தா​லும் எங்​கள் கட்​சி​யின் தலை​வர்​கள் ராகுல் காந்​தி, மல்​லி​கார்​ஜுன கார்​கே, தமி​ழ​கத்​தில் இண்​டியா கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக இருக்​கும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆகி​யோர் தான் பேசி முடி​வெடுப்​பார்​கள். எங்​களுக்கு எத்​தனை சீட்​டு​கள் வேண்​டும் என்​பதை எங்​களது கூட்​ட​ணிக் கட்சி தலை​மை​யிடம் நாகரி​க​மாக கேட்​டுப் பெறு​வோம். தமி​ழ​கத்​தில் இண்​டியா கூட்​டணி வலிமை​யாக இருக்​கிறது. அதை அசைத்​துப் பார்க்க முயற்​சிக்​கின்​ற​னர். ஆனால் அதுநடக்​காது” என்று தெரிவித்​தார்.

“திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வெற்றி பெற வேண்டும்” - செல்வப்பெருந்தகையிடம் தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
காடுவெட்டி குரு மகள் ஜன.9-ல் புதிய கட்சி தொடங்குகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in