திமுகவில் செயல்படும் அதிமுக: தம்பிதுரை ‘கல கல’

தம்பிதுரை |கோப்புப் படம்

தம்பிதுரை |கோப்புப் படம்

Updated on
1 min read

​தி​முக​வில் தான் அதி​முக ஒரு பக்​கம் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது என அதி​முக மாநிலங்​களவை உறுப்​பினர் தம்​பிதுரை தெரி​வித்​தார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக​வில் தற்​போது அமைச்​சர்​களாக இருப்​பவர்​களில் பலரும் அதி​முக பாசறை​யில் பயிற்சி பெற்​றவர்​கள் தான். இதில் குறிப்​பாக அனிதா ராதாகிருஷ்ணன், எஸ்​.​முத்​து​சாமி, செந்​தில் பாலாஜி, ரகுப​தி, சேகர் பாபு, எ.வ. வேலு இவர்​கள் அனை​வ​ருமே அதி​முக​விலிருந்து சென்​றவர்​கள்.

இவர்​கள் அங்கு அமைச்​சர்​களாக உள்​ளனர். ஒரு வகை​யில் பார்த்​தால் உண்​மை​யான அதி​முக அங்கே தான் ஒரு பக்​கம் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. திமுக​வில் அவர்​களுக்​குத் தேவை​யான ஆட்​கள் இல்​லாத​தால் தான் அதி​முக​வில் பயிற்சி பெற்​றவர்​களை அவர்​கள் பயன்​படுத்​திக் கொள்​கி​றார்​கள்.

தற்​போது அதி​முக​வில் இருப்​பவர்​கள் அனை​வ​ரும் எம்​.ஜி.ஆர், ஜெயலலிதா மற்​றும் பழனி​சாமி ஆகி​யோரின் உண்​மை​யான விசு​வாசிகள். இங்கே இருப்​பவர்​கள் எதற்​கும் அஞ்​சாமல் அதி​முக வெற்​றிக்​காக உழைப்​பவர்​கள். பழனி​சாமி​யின் தலை​மையி​லான தற்​போதைய கூட்​ட​ணியே சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்றி பெறும். மற்ற கட்​சி​களின் கூட்​ட​ணி​கள் குறித்து எங்​களுக்கு எந்​தக் கவலை​யும் இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>தம்பிதுரை |கோப்புப் படம்</p></div>
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in