உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
Updated on
1 min read

மதுரை: உசிலம்​பட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் நடை​பெறு​வ​தாக இருந்த தமிழக அரசின் தாய்​மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்தை முதல்​வர் விஜய் கடந்த ஜூனில் அறி​வித்​தார். இத்​திட்​டத்​தில் அரசு மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்​தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்​கப்​படும்.

முதலில் இத் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்.15 அன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் செப்.25-ல் தொடங்கும் என கூறப்பட்டது. பின்னர் 28-ம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மதுரை மாவட்​டத்​தில் தற்​போது​வரை 6,500 குழந்​தைகள் தங்க மோதிரம் பெறும் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளனர். இக்​குழந்​தைகளுக்கு வழங்​கு​வதற்​கான மோதிரங்​கள் மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை, திரு​மங்​கலம், உசிலம்​பட்​டி, மேலூர் அரசு மருத்​து​வ​மனை​களில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

இத்​திட்​டத்தை உசிலம்​பட்டி அரசு மருத்​து​வ​மனை​யில் வரும் 28-ம் தேதி முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என முன்பு அறிவிக்​கப்​பட்​டது. இதற்​கான ஆயத்​தப் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வந்​தன. சுகா​தா​ரத் திட்ட இயக்​குநர் உமா தலை​மையி​லான அதி​காரி​கள் விழா நடை​பெறவுள்ள இடத்தை ஆய்வு செய்​தனர்.

இந்​நிலை​யில், பாது​காப்பு காரணங்​களுக்​காக இத்​திட்ட தொடக்க விழா, உசிலம்​பட்​டிக்கு பதிலாக மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதையடுத்​து, மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் முன்னேற்பாட்டு பணி​கள் நேற்று தொடங்​கின.

விழா மேடை​யில் 50 பேருக்கு மோதிரத்தை வழங்கி ​திட்​டத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்​கிறார். அதனைத் தொடர்ந்​து, பிரசவ வார்​டில் அன்​றைய தினத்​தில் பிறந்த குழந்​தைகளுக்கு முதல்​வர் மோதிரம் வழங்​கு​வார் என தெரி​விக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்த தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்
‘முதல்வர் விஜய் ஒப்புதலின்றி பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்துக்கு உத்தரவா?’ - கனிமொழி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in