

கனிமொழி எம்.பி
சென்னை: “முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் பட்டினப்பாக்கத்தில் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உத்தரவிட்டார்களா?’ என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதல்வர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக?
முதல்வரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப் பணித் துறைக்கு உத்தரவிட்டார்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.