

மதுரை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் விஜய் நாளை (செப். 28) மதுரை வருகிறார்.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். இதற்காக மதுரைக்கு விமானத்தில் நாளை காலை வரும் முதல்வர், முதலில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து, 25 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். பிரசவ வார்டுக்கு சென்று, அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார்.
பின்னர், புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியத்தை முதல்வர் திறந்து வைத்து பார்வையிடுகிறார். 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.