சென்னையில் வீட்டு இணைப்புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர்

சென்னையில் வீட்டு இணைப்புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் வீடு​கள் உட்பட அனைத்து மின் இணைப்​பு​களி​லும் மின்​நுகர்வை துல்​லிய​மாக கணக்​கெடுக்​க​வும், மின் இழப்பை தடுக்​க​வும் ஸ்மார்ட் மீட்​டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளை​யும் மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யது.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் ஸ்மார்ட் மீட்​டர் திட்​டத்தை செயல்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்​தில் டெண்​டர் கோரப்​பட்​டது. பின்​னர் டெண்​டர் நடை​முறை​களில் நிறு​வனங்​களுக்கு பல சந்​தேகங்​கள் இருந்​த​தால் டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்​தில் மீண்​டும் டெண்​டர் விடப்​பட்​டது.

ஆனால் டெண்​டரில் பங்​கேற்ற நிறு​வனம் அதிக தொகை கோரிய​தால் அந்த டெண்​டரும் ரத்து செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி 3 கோடி ஸ்மார்ட் மீட்​டர்​கள் கொள்​முதல் செய்​வதற்​கான டெண்​டர் கோரப்​பட்​டது.

இந்த டெண்​டரில் 42 நிறு​வனங்​கள் பங்​கேற்​றன, ஆனால் அந்த டெண்​டர் திறக்​கப்​பட​வில்​லை. தமிழகத்​தில் ஆட்​சி​மாற்​றம் ஏற்​பட்ட பின்​னர் கடந்த ஆட்​சிக் காலத்​தில் கோரப்​பட்ட டெண்​டர்​களில் முறை​கேடு இருப்​ப​தாகதெரி​வித்து அனைத்து துறை​களி​லும் சில டெண்​டர்​கள் ரத்து செய்​யப்​பட்டுள்ளது.

அந்த வகை​யில் இந்த 3 கோடி ஸ்மார்ட் மீட்​டர் டெண்​டரும் ரத்து செய்​யப்​பட​வுள்​ளது. மேலும் வீட்டு இணைப்​பு​களுக்கு 56 லட்​சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்​முதல் செய்​ய​வும், தொழில், வணி​கப்பிரிவு இணைப்​பு​களுக்கு 50 லட்​சம் ஸ்மார்ட் மீட்​டர்​கள் கொள்​முதல் செய்யவும் டெண்​டர் கோரப்​பட​வுள்​ளது.

பழைய டெண்​டர் ரத்து செய்​வது மற்​றும் புதிய டெண்​டர்​கள் கோரு​வது ஆகிய​வற்​றுக்கு அடுத்து நடை​பெறும் வாரிய கூட்​டத்​தில் ஒப்​புதல் வழங்​கப்​பட​வுள்​ள​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்து அவர்​கள் மேலும் கூறிய​தாவது: முதற்​கட்​ட​மாக சென்னை மாநகர பகு​தி​களில் ஸ்மார்ட் மீட்​டர் பொருத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே தியாக​ராய நகரில் ஒரு லட்​சம் ஸ்மார்ட் மீட்​டர்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன, இந்த மீட்​டர்​களில் ரேடியோ அலை​வரிசை தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள நிலை​யில், புதிய மீட்​டர்​களி​லும் அதே தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படும்.

இதன்​மூலம் மீட்​டர்​களில் இருந்து மின் பயன்​பாட்டை மின் வாரி​யம் பெற்​றுக்​கொள்​ளும். ஸ்மார்ட் மீட்​டர்​களுக்கு மத்​திய அரசு ஒரு மீட்​டருக்கு ரூ.900 மட்​டுமே வழங்​கும், மீத​முள்ள தொகையை மின் வாரி​யம் ஏற்​றுக்​கொள்​ளும். சந்தை நில​வரப்​படி ஒரு ஸ்மார்ட் மீட்​டர் ரூ.6 ஆ​யிர​மாக இருக்​கும் நிலை​யில், டெண்​டரிலேயே விலை இறுதி செய்​யப்​படும்​.

சென்னையில் வீட்டு இணைப்புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர்
எந்த சூழலிலும் லஞ்சம் வாங்கக் கூடாது: போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in