“பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பில்லை” - அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

Updated on: 
1 min read

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் நடக்​கும் தேவர் குருபூஜை விழா​வில் முதல்​வர் விஜய் பங்​கேற்க வாய்ப்​பில்லை என அமைச்​சர் நிர்​மல்​குமார் தெரி​வித்​தார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் பசும்​பொன்​னில் அக்.30-ம் தேதி முத்​துராமலிங்​கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்​றும் 64-வது குருபூஜை நடை​பெற உள்​ளது. இதை முன்​னிட்டு மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முன்​னேற்​பாடு பணிகளை அமைச்​சர்​கள் நிர்​மல் குமார், மதன்​ராஜா, வி.கே.ராஜீவ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்​தனர்.

தேவர் நினைவிடம், தேவர் வாழ்ந்த இல்​லம், மக்​கள் மற்​றும் முக்​கிய பிர​முகர்​கள் வந்து செல்​லும் வழிகள், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில் ரூ.2.17 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் புதிய சாலை, ஹெலிபேட் தளம், அன்​னதானக் கூடம் உள்​ளிட்ட இடங்​களை அமைச்​சர்​கள் ஆய்வு செய்​தனர். முன்​னதாக அமைச்​சர்​கள் தேவர் சிலைக்கு மாலை அணி​வித்து மரியாதை செலுத்​தினர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் நிர்​மல்​குமார் கூறிய​தாவது: பசும்​பொன்​னில் கூட்ட நெரிசலை குறைக்க புதிய சாலை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. பாது​காப்பு முன்​னேற்​பாடுகளை மேற்​கொள்​ளவும் மக்​களுக்​குத் தேவை​யான அடிப்​படை வசதி​களை செய்து தரவும் அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தேவர் குருபூஜை விழா​வில் கூட்​டம் அதி​க​மாக இருப்​ப​தால் முதல்​வர் விஜய் வரு​வதற்கு வாய்ப்​பில்லை. கூட்​டம் இருக்​கும் இடங்​களில் மக்​கள் பாது​காப்​புக்​காக முதல்​வர் பங்​கேற்​ப​தில்லை. அத​னால்​தான் மீனாட்சி அம்​மன் கோயில் கும்​பாபிஷேக விழா​விலும் முதல்​வர் கலந்​து​கொள்​ளவில்லை.

தேவர் நினைவிடம் அருகே அமைந்​துள்ள தியான மண்​டபம் பகுதி​யில் இளைஞர்​கள், பெண்​கள் அரசு போட்​டித் தேர்​வு​கள் உள்​ளிட்​ட​வற்​றுக்கு தயாராகி படிக்​கும் வகை​யில், நவீன பொது நுால​கம் அமைக்​கப்​படும். தேவர் நினைவிடத்​தில் அடிப்​படை உள்​கட்​டமைப்பு வசதி​கள் செய்து கொடுக்க நட​வடிக்கை எடுக்​கப்​படும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முன்​னதாக சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அமைச்​சர் நிர்​மல்​குமார், “இடைத்​தேர்​தலில் அதிமுக கோட்​டை​யாக இருந்த தாராபுரம் தொகுதி​யில் அதிக வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றோம். இனி வரும் இடைத்​தேர்​தல்​களி​லும் இதே முடிவுதான் இருக்​கும். அதிமுக, திமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்​ததாலேயே இந்த வீழ்ச்சி. இனிவரும் அனைத்து தேர்​தலிலும் திமுக, அதிமுக, பாஜக ஒன்று சேர்ந்​து​தான் முதல்​வர் விஜய்யை எதிர்க்​கும்” என்​றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல்குமார் </p></div>
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in