1,000 ஏசி மின் பேருந்து கொள்முதல் டெண்டர் ரத்து

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: ஆ​யிரம் ஏசி மின் பேருந்துகள் கொள்​முதலுக்​கான டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக மாநகர போக்​கு​வரத்து கழகம் தெரி​வித்​துள்​ளது.

சென்னை மாநகர போக்​கு​வரத்து கழகம் சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களை குறைக்​கும் நோக்​கில் மின்​சார பேருந்​துகளை இயக்கி வரு​கிறது. தற்​போது 310 ஏசி மின்​சார பேருந்​துகளும், 400 ஏசி வசதி இல்​லாத பேருந்​துகளும் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த மின்​சார பேருந்​துகள் ஒப்​பந்த அடிப்​படை​யில் இயக்​கப்​பட்டு வரு​கிறது. ஒப்​பந்​தப்​படி பேருந்​துகளை தனி​யார் நிறு​வனம் இயக்​கும், அதற்​கான தொகையை போக்​கு​வரத்து கழகம் வழங்​கும்.

அதன்​படி, ஒரு பேருந்து தின​மும் 200 கி.மீ. இயக்க வேண்​டும், மாநகர போக்​கு​வரத்து கழகம் ஏசி பேருந்​துகளுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.80.82-ம், ஏசி இல்​லாத பேருந்​துகளுக்கு ஒரு கி.மீ.க்கு ரூ.77.12-ம் வழங்​கு​கிறது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆயிரம் 12 மீட்​டர் தாழ்தள மின் பேருந்​துகளை கொள்​முதல் செய்ய டெண்​டர் கோரியது. இந்த டெண்​டரில் அதிக நிறு​வனங்​கள் பங்​கேற்​காத​தால் பலமுறை டெண்​டர் திறப்பு ஒத்​திவைக்​கப்​பட்​டது.

இதனிடையே நேற்று டெண்​டர் திறக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. டெண்​டரில் அதிக நிறு ​வனங்​கள் பங்​கேற்​காததே காரணம் என அதி​காரி​கள் கூறினர்.

<div class="paragraphs"><p><em><strong>கோப்புப்படம்</strong></em></p></div>
ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஆர்எம்யூ கண்ணையா மகன் பிரகாஷ் முன்ஜாமீன் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in